குடிபோதையில் நடுரோட்டில் உருண்ட வாலிபர் : நண்பனைக் காப்பாற்ற ரிஸ்க் எடுத்த இளைஞர் !

பராத தொகையையும் அந்த அப்பாவி இளைஞரே கட்டியுள்ளார்.

சீனாவில்  இளைஞர் ஒருவர் குடிபோதையில்  நடுரோட்டில்  செய்த செயலும், அவரைக் காப்பாற்ற இளைஞனின் நண்பர்  செய்த செயலும் எல்லாரையும் சிரிக்க வைத்துள்ளது.

இந்த காட்சிகள் அங்கிருக்கும் சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ளன.   குடிபழக்கம் உடையவர்கள், எப்போதுமே குடித்து விட்டு செய்யும் செயல்கள் எல்லாருக்கும்  சிரிப்பை ஏற்படுத்துவது வழக்கம். அதேப் போன்று சீனாவில் இளைஞர் குடித்து விட்டு செய்யும் செயலினால் அவரின் நண்பர் படாதபாடு படுகிறார்.

மேலும், அந்த இளைஞருக்கு  அந்நாட்டு காவல் துறையினர் அபராதமும் விதித்துள்ளனர்.   இளைஞர் ஒருவர்,  குடித்து விட்டு, தெருவிற்கு வந்து அங்கிருக்கும் இருவழி சாலைகளை பிரிக்கும் பலகைகளை பிடித்து இழுகிறார். மேலும் அதன் மேல் தனது தலையைக் கொண்டு போய் இடித்துக் கொள்கிறார்.

இதனைப்பார்த்த அவரின், நண்பர் உடனே ஓடி வந்து,  இளைஞரைப் பின் வாக்கில் இருந்து இழுகிறார். அப்போது அந்த இளைஞர், பலகைகளுடன் சேர்ந்து கீழே விழுகிறார்.  இந்த காட்சிகளை கண்ட காவல் துறையினர், மறுநாள் அந்த இளைஞர்களின் வீட்டிற்கு சென்று அபராதம் விதித்துள்ளனர்.

மேலும், குடித்த இளைஞரால் அந்த பலகைகள் கீழே விழவில்லை என்று, அவனை இழுத்த நண்பனினால் தாம் பலகை அனைத்தும் ஒருசேர கீழெ விழுந்தாக போலீசார் விளக்கமும் அலித்துள்ளனர். ஆனால் இது எதுவே தெரியாத அந்த குடிகார இளைஞர், போலீசார் விசாரிக்க சென்றப் போது  நிம்தியாக தூக்கிக் கொண்டிருந்துள்ளார்.

அவனிடம் நண்பனாக இருக்கும் ஒரே காரணத்தினால், இந்த அபராத தொகையையும் அந்த அப்பாவி இளைஞரே கட்டியுள்ளார்.

Footage: Drunk teenager pulls down road partitioning fence in SW China

A drunk teenager pulled down a 50-meter-long section of a road partitioning fence in southwest China's Yunnan Province on March 1.

Posted by CGTN on 11 मार्च 2018

×Close
×Close