பல கோடி இதயங்களை கவர்ந்த பாகிஸ்தான் விளம்பரம்…. நீங்கள் பார்த்தீர்களா?

இந்த விளம்பரம் அம்மாவின் பாசத்தை அப்படியே ஞாபகப்படுத்துகிறது.

By: Updated: March 7, 2018, 02:27:45 PM

பாகிஸ்தான் தொலைக்காட்சியில்  சமீபத்தில் வெளியான உணவுப் பொருள் சம்பந்தமான விளம்பரம் ஒன்று அனைவரின் கண்களையும் கலங்க வைத்துள்ளது.

தொலைக்காட்சியில்  சீரியல்கள், படங்கள், பாடல்கள் ஒளிப்பரப்படும் போது, நடு நடுவில் தனியார் விளம்பரங்கள் 5 நிமிடங்களுக்கு ஒளிப்பரப்படும்.  இந்த 5 நிமிடங்களில் குறைந்தது, 10 க்கும் மேற்பட்ட பல்வேறு விளம்பரங்கள் ஒளிப்பரப்பாகும். மொபைல் ஃபோனில் தொடங்கி,  வீட்டு அத்தியாசிய பொருட்கள், உணவு பொட்கள், வண்டி என அனைத்து விதமான விளம்பரங்களும் வந்து செல்லும்.

இதில், ஏதாவது ஒரு விளம்பரம் ரசிக்கும் படி அமைந்துவிட்டால் போதும், சிறியவர்கள் முதல் பெரியர்வர்கள் வரை,  அடுத்து முறை அந்த விளம்பரம் ஒளிப்பரப்பாகும் போது, எங்கிருந்தாலும் ஓடி வந்து பார்ப்பார்கள்.  இப்படி, மக்களை கவர்ந்த பல விளம்பரங்கள் இன்னும் அவர்களின் நினைவுகளில் நீங்காமல் இருக்கின்றன.  ஹீரோ ஹோண்டா, ஜெம்ஸ், கரை நல்லது, ஸ்வீட் எடு கொண்டாடு, பசி வந்த ஸ்ட்டீகரஸ் எடு போன்ற பல விளம்பரங்கள் இந்தியாவில் மிகவும் பிரபலம்.

அந்த வரிசையில், இப்போது புதியதாக  பாகிஸ்தான் கேக்  விளம்பரம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த விளம்பரத்தை ஆன்லைனில் மட்டும் இதுவரை கோடிக் கணக்கான பார்வையாளர்கள் பார்த்து ரசித்து, ஷேர் செய்து வருகின்றனர்.  தாய் – மகனின் பாசத்தை காட்டும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த விளம்பரம் அம்மாவின் பாசத்தை அப்படியே ஞாபகப்படுத்துகிறது.

மருத்துவராக இருக்கும் பெண்மனி, வேலை பளு காரணமாக தனது மகனிடம் பேச நேரமில்லை தவக்கிறார்கள். பள்ளிச் செல்லும் சிறுவனுக்கும் தனது தாயிடன் நிறைய பேச வேண்டும் என்ற ஆசை. இவர்கள் இருவரும் இணைவது லன்ச் பாக்ஸில் தான். ஆமாம், அந்த தாய் தனது மகனுக்கும் சொல்ல நினைப்பது எல்லாவற்றையும் சிறிய கடித்ததில், எழுதி,  லன்ச் பாக்ஸில் வைத்து அனுப்புகிறார்.

அந்த சிறுவனும் , தினமும் மதிய நேரத்தில் அந்த கடிதத்தை எடுத்து படிக்கிறான். இப்படியே செல்லும் இவர்களின் உறவில் இறுதியில் என்ன நடந்தது என்பதே சுவாரசியமான விளம்பரத்தின் முடிவு.  இதுவரை நீங்கள் இந்த விளம்பரத்தை பார்க்காமல் இருந்தால் இப்போதே பார்த்து விடுங்கள்.

#PeekFreansCakeUp

Sometimes it's the little things that make all the difference. Real moments form real relationships.#PeekFreansCakeUp #RealRishtey #RealGoodnessInside

Peek Freans Cake Up यांनी वर पोस्ट केले शुक्रवार, १६ फेब्रुवारी, २०१८

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the International News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Video this pakistani ad depicting a mother son relationship is winning hearts on social media

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X