Advertisment

'கோபமா இருக்கோம்' உலக தலைவர்களை அதிரவைத்த தமிழக இளம் விஞ்ஞானி வினிஷா

நான் இந்தியாவிலிருந்து வந்த பெண் இல்லை, நான் இந்த பூமியின் பெண், அதற்காக பெருமைப்படுகிறேன்

author-image
WebDesk
New Update
'கோபமா இருக்கோம்' உலக தலைவர்களை அதிரவைத்த தமிழக இளம் விஞ்ஞானி வினிஷா

பிரிட்டனின் கிளாஸ்கோ (Glasgow) நகரில் பருவநிலை மாற்றம் மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர்.

Advertisment

இந்த பருவநிலை மாநாட்டில் தமிழகத்தை சேர்ந்த மாணவி வினிஷா உமா சங்கர் என்பவரும் பங்கேற்றார். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த வினிஷா உமாசங்கர், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க சூரிய மின்சக்தியில் இயங்கும் தெருவோர இஸ்திரி வண்டியை உருவாக்கி அசத்தியவர்.

publive-image

சுற்றுச்சூழலுக்கான ஆஸ்கர் விருது எனப்படும் எர்த்ஷாட் பிரைஸ் பெறுவதற்கான இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக தேர்வான வினிஷாவை, கிளாஸ்கோ மாநாட்டில் உரை நிகழ்த்த வருமாறு இங்கிலாந்து இளவரசர் வில்லியம் அழைப்பு விடுத்திருந்தார். இதை ஏற்று வினிஷா, உலக தலைவர்கள் முன்னிலையில் உரையாற்றினார்.

எனது தலைமுறையினர் கடும் கோபத்துடனும், விரக்தியுடனும் இருக்கிறோம். பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே உலகத் தலைவர்கள் அளிக்கிறார்கள். இது பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது.நாங்கள் கோபப்படுவதற்கு எல்லா காரணங்களும் உள்ளன. ஆனால் எனக்கு கோபம் கொள்ள நேரமில்லை. நாம் பேசுவதை நிறுத்தி விட்டு செயலில் இறங்க வேண்டும்

publive-image

எர்த்ஷாட் பிரைஸ் பெற்றவர்களும் சரி, இறுதிச் சுற்றுக்கு வந்தவர்களும் சரி, நிறைய கண்டுபிடிப்புகளை செய்துள்ளோம். தீர்வுகளை வைத்துள்ளோம். திட்டங்கள் தீட்டியுள்ளோம்.

நான் இந்தியாவிலிருந்து வந்த பெண் இல்லை, நான் இந்த பூமியின் பெண், அதற்காக பெருமைப்படுகிறேன்" என்றார்.

அவரது பேச்சு அங்கிருந்த உலக தலைவர்கள் பலரையும் ஈர்த்தது. சமூக வலைதளங்களில் வினிஷாவின் உரை பலரால் பகிரப்பட்டு வருகிறது.

Tamil Nadu teenager Vinisha Umashankar makes a clarion call at COP26ழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Climate Change
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment