New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/08/2-4.jpg)
நாயை விழுங்கிய மலைப்பாம்பு
viral video: மலைப்பாம்பிடம் இருந்து நாயை மீட்க தீவிர முயற்சியில் இறங்கினர்.
நாயை விழுங்கிய மலைப்பாம்பு
viral video : அமெரிக்காவில் 23 அடி நீளமுள்ள மலைப்பாம்பிடம் உயிரை பணயம் வைத்து, இளைஞர்கள் சிலர் நாயை காப்பாற்றும் வீடியோ பலரை பிரமிக்க வைத்துள்ளது.
பாம்பு என்றால் படையும் நடங்கும் என்பார்கள். அதிலும் மலைப்பாம்பு என்றால் சொல்லவே வேண்டாம். ஆனால் அமெரிக்காவில் இளைஞர்கள் சிலர் மலைப்பாம்பிடம் உயிரை பணயம் வைத்து தங்களின் செல்லப்பிராணியை காப்பாற்றியுள்ளனர். இந்த வீடியோவை பார்த்த பலரும் இளைஞர்களின் செயலை கண்டு பிரமிக்க வைத்துள்ளது.
இந்த வீடியோ அமெரிக்க சமூகவலைத்தளங்களில் வைரல் (viral video) வீடியோவாக பரவி வருகிறது. வீடியோவில் இடம் பெற்றுள்ள இளைஞர்கள் கூட்டமாக பிக்னிக் சென்றுள்ளனர். அப்போது அவர்களின் செல்லப்பிராணி அருகில் உள்ள ஏரியில் தண்ணீர் குடிக்க ஏரியில் குதித்தது. அப்போது ஏரியில் பதுங்கி இருந்த 23 அடி நீளமுள்ள மலைப்பாம்பு நாயை கவ்வியுள்ளது.
வலியால் துடித்த நாயின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடி வந்த இளைஞர்கள் சற்றும் யோசிக்காமல் மலைப்பாம்பிடம் இருந்து நாயை மீட்க தீவிர முயற்சியில் இறங்கினர்.
வெறும் கையில் ஒருவர், மலைப்பாம்பின் வாலை பிடித்து இழுக்க, மற்றொருவர் நாயை அதன் வாயில் இருந்து வெளிக் கொண்டு வருகிறார். இருப்பினும் மலைப்பாம்பு, நாயை விடாமல் பிடித்து வைத்துக் கொள்கிறது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர் கம்பால் , மலைப்பாம்பின் தலையில் ஓங்கி அடிக்கிறார். ’
Men saves Dog from Python Attack pic.twitter.com/rmOqYJ7FLa
— Ken Rutkowski (@kenradio) 29 July 2018
அதன் பின்பு ஒருவழியாக அவர்களின் செல்லப்பிராணி பாம்பின் பிடியில் இருந்து விடுதலையாகி உயிர் பிழைத்துக் கொள்கிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் இளைஞர்களை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.