பயோடெக் தொழில்முனைவோரும் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளருமான விவேக் ராமசாமி, இனி எலான் மஸ்க் உடன் இணைந்து அரசாங்கத் திறன் துறையை (DOGE) வழிநடத்த மாட்டார். டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்ற சிறிது நேரத்திலேயே விவேக் ராமசாமி வெளியேறுவதை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியது.
நவம்பர் தேர்தல் வெற்றிக்குப் பிறகு டிரம்ப் அறிவித்த DOGE, பட்ஜெட் குறைப்புகள் மற்றும் பணிநீக்கம் மூலம் கூட்டாட்சி செலவினங்களைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட உருவாக்கப்பட்டது. ராமசாமியின் வெளியேற்றம் மற்றொரு தேர்தல் பதவிக்காக நடைபெறுகிறது.
செய்தித் தொடர்பாளர் அன்னா கெல்லி, DOGE-ஐ நிறுவுவதில் ராமசாமியின் பங்கு பெரியது என்று கூறினார். "அவர் விரைவில் வேறு பதவிக்கு போட்டியிட விரும்புகிறார், இன்று நாங்கள் அறிவித்த கட்டமைப்பின் அடிப்படையில் அவர் DOGEக்கு வெளியே இருக்க வேண்டும்" என்று கெல்லி கூறினார்.
சி.பி.எஸ் செய்தி கூற்றுப்படி, ராமசாமிக்கும் மற்றும் உள்வரும் ஏஜென்சி ஊழியர்களுக்கும் இடையே உரசல் அவர் வெளியேறுவதற்கு பங்களித்ததாக தெரிவிக்கிறது. DOGE-ன் செயல்பாடுகளில் ராமசாமி குறைவான ஈடுபாடு குறித்து மஸ்க்கிற்கு நெருக்கமான வட்டாரங்கள் விரக்தியை வெளிப்படுத்தியதாக CBS தெரிவித்துள்ளது.
ஓஹியோ கவர்னர் பதவிக்கு விவேக் ராமசாமி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கவர்னராக உள்ள குடியரசுக் கட்சியை சேர்ந்த மைக் டிவைனின் பணி காலம் முடிவடைய உள்ள நிலையில் இவர் போட்டியிடுவார் என கூறப்படுகிறது.
ஆங்கிலத்தில் படிக்க: Vivek Ramaswamy steps down from Trump’s new department DOGE