பிரபல வோக் சவுதி அரேபிய நாளிதழின் அட்டை படத்தில் சவுதி இளவரசி அப்துல்லா அல் சவுத் புகைப்படம் இடம்பெற்றிருப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சவூதி அரேபியாவில் முன்பு இருந்த பழமையான பழக்கவழக்கங்கள் பல நாட்டின் முன்னேற்றத்திற்காக மாற்றப்பட்டு வருகின்றன. சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் தான் இந்த சீர்த்திருத்தங்களுக்கு மிக முக்கிய காரணம்.
பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான துன்புறுத்தல் செய்யும் நபர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 3 லட்சம் ரியால்கள் அபராதம், பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளிப்பது, விளையாட்டு மைதானங்களுக்குள் அனுமதி, திரையரங்குகளுக்கு அனுமதி உட்பட பல சட்டங்களை இளவரசரான முகமது பின் சல்மான் அங்கீகரித்துள்ளார்.
இதற்கு பொதுமக்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் சவுதி பெண்கள் சொந்தமாக தொழில் துவங்கலாம் எனவும் சவுதி அரசு தெரிவித்துள்ளது. அதே போல் பெண்களுக்கு ஓட்டுநர் உரிமங்கள் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை தற்போது தொடங்கியுள்ளது. இந்நிலையில் தான் பிரபல வோக் சவுதி அரேபிய இதழ் சவுதி இளவரசி அப்துல்லா அல் சவுத் புகைப்படத்தை அட்டை படமாக வைத்து வரும் ஜீன் பதிவை அரேபிய பெண்களுக்காக சமர்பிக்க முடிவு செய்துள்ளது.
You've got to be kidding me. A princess graces the cover of next month's Vogue Arabia while @azizayousef @Saudiwoman @LoujainHathloul and other activist women who have worked tirelessly to lift driving ban languish in jail pic.twitter.com/gEmXh8sTHL
— Bethan McKernan (@mck_beth) 31 May 2018
அட்டை படத்தில், இருக்கும் இளவரசி அப்துல்லா அல் சவுத் , மறைந்த மன்னர் அப்துல்லாவின் மகள் ஆவார். அப்துல்லா 2005-ல் இருந்து சவுதி அரசராக இருந்தார் . 2015இல் மரணம் அடைந்தார். இவரின் புகைப்படம் இதழில் இடம் பெற்றிருப்பது பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது. இதில் இளவரசி 1980-களின் மெர்சிடஸ் 450 எஸ்.எல். சிவப்பு காரின் அருக்கையில் செம்ம மாடலாக அமர்ந்திருக்கிறார்.
பெண்கள் மத்தியில் இந்த புகைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், நாட்டை சேர்ந்த சிலர் இளவரசியின் படத்தை எப்படி, அட்டை விளம்பரத்திற்கு பயன்படுத்தலா? என்றும் கடுமையான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.