அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனுக்கு அருகே அமைந்துள்ள ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்திற்கு அருகே நடுவானில் இரண்டு விமானங்கள் மோதிக்கொண்டன. 60 பயணிகள் மற்றும் 4 விமான ஊழியர்களுடன் சென்ற அந்த விமானம் பிளாக் ஹாக் ஹெலிகாப்டருடன் மோதியது.
பிஎஸ்ஏ ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் தரையிறங்க முயன்ற போது நடுவானில் ராணுவ ஹெலிகாப்டரில் மோதியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. விபத்தைத் தொடர்ந்து ரீகன் விமான நிலைய செயல்பாடுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த பிஎஸ்ஏ ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது, ராணுவ ஹெலிகாப்டருடன் நடுவானில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் புறப்பாடுகளும் தரையிறக்கங்களும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. விபத்துக்குள்ளான விமானத்தில் 65 பயணிகள் வரை பயணித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. விபத்தில் சிக்கிய விமானம் போடோமாக் நதி பகுதியில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மீட்புப் பணிகள் தற்காலிகமாக நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பான கட்டணமில்லா தொலைபேசி எண்களை அமெரிக்கன் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ளது.
"விமானம் 5342 இல் உங்கள் உறவினர்கள் இருந்தால் அமெரிக்கன் ஏர்லைன்ஸை 800-679-8215 என்ற கட்டணமில்லா எண்ணில் அழைக்கவும். அமெரிக்காவிற்கு வெளியில் இருந்து அழைப்பவர்கள் கூடுதல் தொலைபேசி எண்களுக்கு news.aa.com செல்லலாம். கனடா, புவேர்ட்டோ ரிக்கோ அல்லது அமெரிக்க விர்ஜின் தீவுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் நேரடியாக 800-679-8215 என்ற எண்ணை அழைக்கலாம்" என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொடோமாக் ஆற்றில் இருந்து இதுவரை சுமார் 18 உடல்கள் மீட்கப்பட்டதாக ஆதாரங்களை மேற்கோள் காட்டி சிபிஎஸ் நியூஸ் தெரிவித்துள்ளது.
கன்சாஸின் விசிட்டாவிலிருந்து வாஷிங்டன் டி.சி.க்கு (டி.சி.ஏ) செல்லும் வழியில் அமெரிக்கன் ஈகிள் விமானம் 5342 என்ற விமானத்தில் 60 பயணிகள் மற்றும் 4 பணியாளர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.