வைரலாகும் வீடியோ: நடனம் ஆடிக்கொண்டே ஆப்ரேஷன் செய்த டாக்டர்.. உயிரிழந்த அப்பாவி நோயாளி!

இதய செயல்பாடு நின்றுவிட்டு அவர் மூளைச்சாவு அடைந்தது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது

அமெரிக்காவில் நடனம் ஆடிக் கொண்டே ஆப்ரேஷன் செய்த மருத்துவரால் நோயாளி ஒருவர் மூளைச்சாவு அடைந்தார்.

கடவுளுக்கு நிகராக பார்க்கப்படும் மருத்துவர்கள் தங்களின் பொறுப்பை உணராமல் செயல்படும் சில நிமிடங்கள் கூட நோயாளியின் உயிரை பறிக்கும் என்பதை உணர்த்தும் விதமாக அமெரிக்காவில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. விண்டெல் என்ற தோல் மருத்துவர் தன்னிடம் சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு பாடல் பாடிக் கொண்டும்ம், நடனம் ஆடிக் கொண்டும் சிகிச்சை செய்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.

மேலும், அறுவை சிகிச்சை செய்யும் நேரத்தில், நோயாளிகள் மயக்கத்தில் இருக்கும் போது டான்ஸ் ஆடுவது, ஹிப் பாப் பாடுவதை வீடியோவாக வெளியிட்டு அதை சமூகவலைத்தளங்களிலும் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோக்களை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதன் பின்பு நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த 2016 ஆம் ஆண்டு தொப்பையை குறைக்க அறுவை சிகிச்சை செய்ய வந்த நபருக்கு வழக்கம் போல் நடனம் ஆடிக் கொண்டே அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதனால், அவரின் இதய செயல்பாடு நின்றுவிட்டு அவர் மூளைச்சாவு அடைந்தது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மருத்துவர் விண்டெல் போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் அமெரிக்க சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

×Close
×Close