Watch: Kamala Harris dances in the rain : நவம்பர் 3ம் தேதி நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் ஒபாமாவின் ஆட்சியில் துணை அதிபராக இருந்த ஜோ பைடன் போட்டியிடுகிறார். துணை அதிபருக்கான தேர்வாக இருக்கிறார் இந்திய - ஆப்பிரிக்க வம்சாவளியான கமலா ஹாரீஸ்.
சமீபத்தில் நடைபெற்ற பிரச்சாரம் ஒன்றில், கொட்டும் மழையில் நடனமாடியதும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மழையோ, பிரகாசமான சூழலோ, ஜனநாயக கட்சி யாருக்காகவும் காத்திராது என்று ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார் அவர்.
கடுமையான சொற்பிரயோகங்களும், வாக்கு வாதங்களும் தேர்தல் அறிக்கைகளும் இருந்தாலும், கட்சியை தாண்டி அனைவரும் மக்கள் தான். மழை என்று வந்தால் அதனை ரசிப்பது மக்களின் இயல்பாக இருக்கிறது. இந்த பாசிட்டிவிட்டி மற்றும் தளராத தன்னம்பிக்கையும் தான் அனைவரையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
அவருடன் பணியாற்றும் இரண்டு அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்ததால் தேர்தல் பிரச்சாரத்திற்கு சில நாட்கள் முடுக்கு போட்டிருந்தார் கமலா. பின்பு திங்கள் கிழமை அன்று அவர் ஓர்லாண்டோ மற்றும் ஜாக்சோன்வைல் ஆகிய இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பெய்த மழையில் தான் இவ்வாறு மழையை ரசித்து கொண்டிருந்தார் கமலா.
மேலும் படிக்க : மாற்றம் வரவேற்கத்தக்கது… 48% பெண்களுடன் நியூசிலாந்து நாடாளுமன்றம்!