Advertisment

வீடியோ: தாய்லாந்து மாலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் பலி

இந்த துபாக்கிச் சூடு சம்பவம் தாய்லாந்து முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வளாகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு வீடியோக்கள் தற்போது ட்விட்டரில் பகிரப்பட்டு வருகின்றன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வீடியோ:  தாய்லாந்து மாலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் பலி

Thailand Shooting Video, Thailand shopping mall gunfire , 20 killed

தாய்லாந்த் வடகிழக்கில் உள்ள நாகோன் ராட்சாசிமா நகரில்  ராணுவ வீரர் ஒருவர் யாரும் எதிர்பாராத வகையில் ஷாப்பிங் மாலில் துப்பாக்கிச் சூடு நடத்தினார். சம்பவ இடத்திலே 20 பேர் கொல்லப்பட்டனர்.

Advertisment

இந்த துபாக்கிச் சூடு சம்பவம் தாய்லாந்து முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வளாகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு வீடியோக்கள் தற்போது ட்விட்டரில் பகிரப்பட்டு வருகின்றன.

சம்பவத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், தனது பேஸ்புக் டைம் லைனில் "யாரும் மரணத்திலிருந்து தப்ப முடியாது" என்ற பதிவு போட்டிருக்கிறார்.துப்பாக்கிச் சூடு நடந்துக் கொண்டிருக்கும் பொது கூட , ​​"நான் கைவிட வேண்டுமா?" என்று கேள்வியை பதிவு செய்தார்.

தாய்லாந்த் போலீசார், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ஜக்ரபந்த் தோம்மா என்றும் சார்ஜென்ட்-மேஜராக ( இளநிலை அதிகாரி) இருக்கின்றார் என்று கூறியது. எவ்வாறாயினும், பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கொங்க்சீப் தந்திரவனிட், காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை அதிகாரபூர்வ வழங்க மறுத்துவிட்டார் .

 

 

சி.சி.டி.வி காட்சியில், சந்தேகிக்கும் நபர் கையில் துப்பாக்கியுடன் மாலில் சுற்றி நடப்பதைக் காணலாம். ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் பிற்பகல் 3:30 மணியளவில் தொடங்கிய சம்பவம் சுமார் 5 மணி நேரம் நீடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ஆரம்பத்தில் நகரத்தில் உள்ள ஒரு வீட்டிற்குச் சென்று இரண்டு பேரை சுட்டுக் கொன்றார், இராணுவத் தளவாடங்களில் ஆயுதங்களை திருடியுள்ளார்.  இராணுவத் தளவாடங்களில் உள்ள மூத்த அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார் என்று  உள்ளூர் காவல்த் துறை தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் நாளிதழ் கூறியிருக்கிறது.

Thailand
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment