அமெரிக்காவில் திருட போன இடத்தில் திருடன் ஒருவன், ஜாலியாக ப்ரேக் டான்ஸ் ஆன வீடியோ வெளியாகியுள்ளது.
கலிஃபோர்னியா மகாணத்தில் உள்ள பிரபல கடை ஒன்றில் திருடன் ஒருவன் கடந்த 13 ஆம் தேதி திருடன் சென்றுள்ளான். இரவில் சென்ற அவனுக்கு கடையின் கதவுகள் முதல் முயற்சியிலியே திறந்துள்ளன. இதை சற்றும் எதிர்பார்க்காத திருடன், உடனே சந்தோஷத்தில் கடையிலியே ஜாலியாக பிரேக் டான்ஸ் ஆடியுள்ளான்.
அதன் பின்பு, அங்கிருந்த பணத்தை கொள்ளையடித்து பழையபடியே கதவை மூடி விட்டு சென்றுள்ளான். கடைக்கு வழக்கம் போல் வந்த கடை முதலாளி தனது, பணம் மற்றும் விலையுர்ந்த சில பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அங்கிருந்த சிசிடிவி காமிராவை ஆய்வு செய்தனர். அதில், இரவு, திருடன் கடைக்குள் நுழைவது, சந்தோஷத்தில் ஆடுவது என அனைத்து காட்சிகளும் பதிவாகியுள்ளன.
VIDEO: Security camera catches thief breaking it down after breaking into a #California business https://t.co/8y8IRURSaz pic.twitter.com/m8q7IAPIhz
— KXAN News (@KXAN_News) May 14, 2018
சிசிடிவி காமிராவில் தெரியும் முகத் தோற்றத்தை வைத்து காவல் துறையினர் திருடனை பிடிக்க தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்நிலையில், திருடன் ஆடிய ஆட்டம் அங்குள்ள சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.