Advertisment

வீடியோ: அமெரிக்கா தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

தாக்குதலில் உயிரிழந்தவர்கள் குறித்த அறிக்கைகளை பென்டகன் இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
world war 3,iran,iran news,iran us news,usa,

world war 3,iran,iran news,iran us news,usa,

கடந்த வாரம் ஜெனரல் காசெம் சுலேமானீ  கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்கா- ஈரான் இடையே பதட்டங்கள் அதிகரித்துவரும் சூழ்நிலையில், இன்று அதிகாலை ஏவுகணைகள் மூலம் ஈராக்கில் இரண்டு அமெரிக்க தளங்களை ஈரான் தாக்கியுள்ளது.

Advertisment

இஸ்லாமிய புரட்சிகர வீரர்களின் பதில் தாக்குதல் தொடங்கியதாக ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை 'தி டெலிகிராம்' என்ற செய்தி நிறுவனம் மூலம் தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை பாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்க ட்ரோன் மூலம் காசெம் சுலேமானீ கொல்லப்பட்டார்

சுலேமானீயின்  உடல் ஈரானில் உள்ள அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்த  சில மணி நேரங்களிலேயே இந்த தாக்குதல் நடந்தேறியிருக்கிறது. அமெரிக்க தளங்கள் மீதான தாக்குதல்கள் அதிகாலை 1.20 மணிக்கு தொடங்கியதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈராக்கில் அமெரிக்க தளங்கள் மீதான தாக்குதல்களை "அறிந்திருக்கின்றோம்" என்று அமெரிக்கா வெள்ளை மாளிகையும் அறிக்கை விடுத்துள்ளது. இது குறித்த முழு நிலைமை அதிபருக்கு  விளக்கமளித்ததாகவும், அதன்  தேசிய பாதுகாப்பு குழுவுடன் ஆலோசித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பெரிய உயிர் சேதங்களை தடுக்க மத்திய கிழக்கு ஆசிய பகுதியில் இருந்து அமெரிக்கா அதன் படைகளை திரும்பப் பெறவேண்டும் என்று ஈரானிய அரசு தொலைக்காட்சி மீண்டும் அறிவுறுத்தியுள்ளது .

தாக்குதலில் உயிரிழந்தவர்கள் குறித்த அறிக்கைகளை பென்டகன் இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜொனாதன் ஹாஃப்மேன் ஒரு அறிவிப்பில், "அல்-ஆசாத் விமானத் தளம்,எர்பில் என்ற இரு அமெரிக்கா தளங்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக "என்று கூறினார்.

தகுந்த பதிலடியை நாங்கள் மதிப்பீடு செய்யும் வேளையில், ​​பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கா வீரர்கள், கூட்டாளர்களின் பாதுகாக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம் என்றும் கூறியுள்ளார்.

United States Of America Iran Donald Trump
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment