வாவ்!!!! 50 விலங்கினங்களை போல் ஒரே நேரத்தில் குரல் கொடுக்கும் மிமிக்ரி இளைஞன்!

முதலை, பல்லி, ஆமை, ஓநாய், கொசு என நாம் சற்றும் எதிர்பாராத விலங்கினங்களின் குரல்களை

மேற்கு ஆப்பிரிக்காவில் 19 வயது இளைஞன், ஒரே நேரத்தில் 50 வகையான விலங்கினங்களை போல் மிமிக்கிரி செய்யும் வீடியோ பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

கடவுள் ஒரு மனிதனை படைக்கும் போதே, அவனுக்குள் ஒரு தனிப்பட்ட திறமையை கண்டிப்பாக வைத்திருப்பார். வளரும் காலங்களில்,  அவனுக்குள் இருக்கும் திறமையை அவன் அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும்.  அப்படி செய்யபவனே வாழ்க்கையில் வெற்றி அடைகிறான்.

யார் யாருக்குள் என்னென்ன திறமைகள் ஒளிந்திருக்கும் என்று யாரலையும் கணிக்க முடியாது. அந்த வகையில், மேற்கு ஆப்பிரிக்காவின் கானா பகுதியைச் சேர்ந்தவர் தான் ஓசேய். 19 வயதாகும், இவர் சிறு வயதில் இருந்தே விலங்குகள் குரல் எழுப்பும் சத்தத்தை அதிகம் கவனிப்பாராம்.

ஒவ்வொரு விலங்குகளும்  எப்போதெல்லாம் சத்தம் போடும், ஒவ்வொரு சத்ததிற்கும் என்ன அர்த்தம், கோபத்தில் எப்படி குரல் கொடுக்கும் என அனைத்தும் இவருக்கும் அத்துப்படியாம். இப்படி விலங்களுடனே வாழ்ந்த இவர், தற்போது ’அனிமல் சவுண்ட் மிமிக்ரி ’ கலைஞனாக உருமாறியுள்ளார்.

ஒரே நேரத்தில் 50க்கும் மேற்பட்ட விலங்கினங்களின் குரல்களை இவர் மிமிக்கிரி செய்து காட்டுகிறார்.  முதலை, பல்லி, ஆமை, ஓநாய், கொசு என நாம் சற்றும் எதிர்பாராத விலங்கினங்களின் குரல்களை கூட இவர்,  அசாத்தியமாக செய்து காட்டி வருகிறார்.

இவரின் பக்கம் தற்போது உலக செய்தி தொலைக்காட்சிகள் தங்களின் கவனத்தை திருப்பியுள்ளன.மேலும், இவர் மிமிக்கிரி செய்யும் வீடியோக்களும்  தற்போது சமூக வலைத்தளங்களின் அதிகம் கவனம் பெற ஆரம்பித்துள்ளது.

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்பதே ஓசேய்யின் நீண்ட நாள் ஆசையாம்.

Get the latest Tamil news and International news here. You can also read all the International news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Watch whoa 19 year old teenager from ghana can imitate over 50 animals

Next Story
கடல் கடந்து வாழும் தமிழ் இலக்கியம்… மியான்மரில் அமைகிறது வள்ளுவர் கோட்டம்.
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com