கேரள வெள்ளம் : கேரளாவில் வரலாறு காணாத அளவில் பெய்த மழையால் பெரும் சேதாரத்தை சந்தித்து வந்துள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து கேரள மக்கள் நலம் பெற பல்வேறு வகையில் உதவி செய்து வருகின்றனர்.
கேரள வெள்ளம் குறித்து இம்ரான் கான் ட்விட்டர் பதிவு
இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட இம்ரான் கான் , பாகிஸ்தான் மக்களின் சார்பாக கேரள மக்களுக்கு வாழ்த்துகளையும் பிரார்த்தனைகளையும் பதிவு செய்துள்ளார். மனித நேய அடிப்படையில் கேரள மக்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்யத் தயாராக இருக்கிறோம் என்று தன்னுடைய ட்விட்டர் தளத்தில் கருத்தினை பகிர்ந்திருக்கிறார்.
On behalf of the people of Pakistan, we send our prayers and best wishes to those who have been devastated by the floods in Kerala, India. We stand ready to provide any humanitarian assistance that may be needed.
— Imran Khan (@ImranKhanPTI) 23 August 2018
கடந்த வாரத்தின் பிற்பாதியில் மழையின் அளவு குறைந்ததாலும், வெள்ள நீர் வடியத் தொடங்கியதாலும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்கள் வீடு திரும்பி வருகிறார்கள். ஐக்கிய அரபு அமீரகம் கேரளாவிற்கு சுமார் 700 கோடி ரூபாயை நிதியாக கொடுக்க முன்வந்தது குறிப்பிடத்தக்கது.
கேரளாவில் நடைபெறும் மீட்பு நடவடிக்கைகள் பற்றி படிக்க
வெளிநாடுகளில் இருந்து பேரிடர் நிதியை இந்தியா வாங்குவதை 2004ல் இருந்து நிறுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலும் பாகிஸ்தான் கேரளாவிற்கு உதவி புரிய முன்வந்திருக்கிறது என்பது மிகவும் நெகிழ்ச்சியான விசயமாக பார்க்கப்படுகிறது.
மேலும் கத்தார் நாட்டு விமான சேவையான கத்தார் ஏர்வேஸ் பக்ரீத் அன்று கேரள மக்களுக்கு நிதி உதவி அளித்து அறிவித்திருக்கிறது.
#QatarAirwaysCargo offers relief to flood-hit Kerala by transporting donations from Doha this Eid al-Adha. #Movedbypeople pic.twitter.com/x5u3MAJzKH
— Qatar Airways (@qatarairways) 19 August 2018
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.