what caused blast in Beirut, Lebanon : லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று முன்தினம் (04/08/2020) அன்று அம்மோனியம் நைட்ரேட் கிடங்கில் தீப்பற்றி மாபெரும் வெடி விபத்து ஏற்பட்டது. இதுவரை நம் வாழ்நாளில் கண்டிராத அளவு கொடுமையான விபத்தாக அது உருவெடுத்துள்ளது. அது வெடித்து சிதறிய சத்தம் சைப்ரஸ் பகுதி வரை கேட்டுள்ளது. இந்த விபத்து எதனால் ஏற்பட்டது என்பதை விவரிக்கிறது இந்த கட்டுரை.
மேலும் படிக்க : லெபனானில் ஏற்பட்ட மிகப்பெரிய வெடி விபத்து… சிக்கியவர்களின் நிலை என்ன?
இந்த விபத்தில் இதுவரை 100 பேர் பலியாகியுள்ளனர். 4000 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்களின் வீடுகளை இழந்துள்ளனர். மூன்று பெரிய மருத்துவமனைகள் அழிந்த நிலையில் 2 மருத்துவமனைகள் பெரும் சேதாரத்தை சந்தித்துள்ளது.
3000 டன் அம்மோனியம் நைட்ரேட், பெய்ரூட் துறைமுகத்தில் சேமிக்கப்பட்டிருந்தது. அதன விளைவாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 2013ம் ஆண்டு மொசாம்பிக் சென்று கொண்டிருந்த ரோஹ்சூஸ் (Rohsus) என்ற கப்பல் தொழில் நுட்ப கோளாறு காரணமாக லெபானின் பெய்ரூட் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது. அந்த கப்பலை இயக்கிய பணியாளர்கள் அந்த கப்பலில் இருந்து வெளியேறினர். அந்த கப்பல் தனித்துவிடப்பட்டது. அந்த கப்பலின் கார்கோவில் இருந்த சரக்குகள் ஹாங்கர் 12ல் இறக்கி வைக்கப்பட்டது.
2014 முதல் 2017ம் ஆண்டு வரை 5 முறை, இந்த சரக்குகளை நீக்க வேண்டும் என்று அந்நாட்டின் சுங்க துறை இலாக்கா நீதித்துறைக்கு பரிந்துரை செய்தது. ஆனாலும் அதன் பின்னர் எந்த பதிலும் கிடைக்கப் பெறாத காரணத்தால் அந்த சரக்குகளை பெய்ரூட் துறைமுகத்தில் வைத்து பாதுகாத்து வந்தனர். இதன் விளைவாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil