உக்ரைன் -ரஷ்ய போர் துவங்கியதில் இருந்தே உலக நாடுகள் பெரும் அச்சத்தில் இருந்தன. இந்த போர் மூன்றாம் உலக போராக மாறக்கூடும் என்ற அச்சம் அனைவரது மனதிலும் இருந்தது.
கருங்கடலில் 300-க்கும் மேற்பட்ட ரஷ்ய கப்பல்கள் உக்ரெய்னிய துறைமுகமான செவஸ்டபோல் நகரின் அருகே நிற்கின்றன.ரஷ்யாவின் கருங்கடல் பகுதி கப்பற்படையை தகர்க்க உக்ரைன் திட்டமிடுகிறது. ஆளில்லா நீர்மூழ்கி கப்பல்களில் வெடிகுண்டுகளை பொருத்தி ஒவ்வொரு ரஷ்ய கப்பலையும் குறிவைத்து ஒரு நீர்மூழ்கியை அனுப்புகிறார்கள். ஒவ்வொன்றும் அமெரிக்க உதவியுடன் தயாரிக்கப்பட்ட ரேடார், சோனாரால் கண்டுபிடிக்க முடியாத ட்ரோன் வகை நீர்மூழ்கிகள்.
ஆனால் செவஸ்டபோல் பகுதியை அவை நெருங்கியவுடன் அவற்றுக்கு இணையத்தொடர்பு தேவைப்படுகிறது. அவற்றுக்கு இணையத்தொடர்பை அளிக்ககூடிய வல்லமை ஒரே ஒருவரிடம் தான் உள்ளது. விவரத்தை சொல்லாமல் அவரை அழைத்து "செவாஸ்டபோல் வரை இணையத்தொடர்பை உக்ரெய்னிய கடற்படைக்கு அதிகரியுங்கள்" என்கிறார்கள் அமெரிக்கர்கள்
அங்கே ரஷ்ய கருங்கடல் கப்பற்படை இருப்பதை அறிந்த அவர் விஷயத்தை சரியாக புரிந்து கொண்டு இணையத்தொடர்பை அளிக்க மறுத்துவிடுகிறார்.. கடைசி நிமிடத்தில் இணையத்தொடர்பு இன்றி ட்ரோன் நீர்மூழ்கிகள் கப்பல்களை குறிவைக்க முடியாமல் கரையில் ஒதுங்குகின்றன. ரஷ்யாவின் ஒட்டுமொத்த கப்பற்படையும் தப்புகிறது. அமெரிக்க போர் ஆதரவாளர்களும், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியும் செய்வதறியாமல் முயற்சியை கைவிடுகின்றனர்.
இணைய தொடர்பு கிடைத்திருந்தால் என்ன நடந்திருக்கும்.. திக்... திக்... நிமிடங்கள்
அப்படி 300 கப்பல்களும் அழிந்து பல்லாயிரம் ரஷ்ய வீரர்கள் மரணம் அடைந்திருப்பார்கள். புடின் உடனே அணுகுண்டு தாக்குதலை உக்ரெய்ன் மேல் நிகழ்த்தியிருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்கிறார்கள் நிபுணர்கள். ஜப்பான் மேல் அணுகுண்டு வீச காரணமான 'பேல் ஹார்பர்' தாக்குதலில் 19 கப்பல்கள் மட்டுமே அழிந்தன.
தன் நாட்டின் மேல் அணுகுண்டு தாக்குதலை ரஷ்யா நடத்தும் என தெரிந்தும் ஏன் உக்ரைன் அப்படி ஒரு முடிவை எடுத்தது? அமெரிக்கா ஏன் அதற்கு துணைபோனது? அணுகுண்டு வீசபட்டிருந்தால் உக்ரைன் போர் மூன்றாம் உலகப்போர் ஆகியிருக்கும். போர் முடிவில் ரஷ்யா அழிந்திருக்கும். அதனுடன் வேறு எந்த நாடுகள் அழிந்தாலும் தான் உக்ரைனுக்கு என்ன கவலை? போரில் அவர்கள் வெற்றி பெற்றிருப்பார்கள்.
ஆனால் ஒரே ஒரு மனிதர் அப்படி ஒரு உலகபோர் மூள்வதை தடுத்தார் யார் அவர்?
"எலான் மஸ்க்"
ஒட்டுமொத்த உக்ரைனுக்கும் அவரது ஸ்டார்லிங் மூலம் தான் இணையத்தொடர்பு கிடைக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பா, நேட்டோ, உக்ரைன் என யார் பேச்சையும் கேட்காமல் தனி ஒருவனாக மூன்றாம் உலகப்போரை தடுத்தார் எலான் மஸ்க்.
செய்தி: என்.எம்.இக்பால்,கன்னியாகுமரி.