Why only bothered about Muslims in Kashmir and not in China america to Pakistan - காஷ்மீர் முஸ்லிம்கள் கண்ணுக்கு தெரிகிறார்கள்; சீன முஸ்லிம்களின் வேதனை தெரியலையா? - பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கேள்வி
ஜம்மு-காஷ்மீரில் புதிதாக உருவாக்கப்பட்ட யூனியன் பிரதேசத்தில் முஸ்லிம்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுவிட்டதாக கூறும் பாகிஸ்தானின் விமர்சனங்களை விமர்சித்த அமெரிக்கா, பிரதமர் இம்ரான் கானிடம் உய்குர்கள் மற்றும் சீனாவில் துருக்கிய மொழி பேசும் பிற முஸ்லிம்கள் மீதான அட்டூழியங்கள் குறித்து மட்டும் பாகிஸ்தான் மௌனம் காப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளது.
Advertisment
"மேற்கு சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள் மீதும் அதே அளவிலான அக்கறையை நான் காண விரும்புகிறேன். எனவே முஸ்லிம்களின் மனித உரிமைகள் குறித்து அக்கறை காட்டுவது என்பது காஷ்மீரை தாண்டியும் விரிவடைகிறது. இதில், ஐ.நா பொதுச் சபையின் நிர்வாகம் மிகவும் ஈடுபாடு கொண்டிருப்பதையும், சீனா முழுவதும் முஸ்லிம்களுக்கு தொடர்ந்து நிலவும் கொடூரமான நிலைமைகள் குறித்து வெளிச்சம் காட்ட முயற்சிப்பதையும் நீங்கள் காண்கிறீர்கள்," என ஐக்கிய நாடுகள் சபையின் 74 வது அமர்வின் சிறப்பு மாநாட்டின் போது, தென் மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க செயல் உதவி செயலாளர் ஆலிஸ் வெல்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், சீனாவில் முஸ்லீம் சமூகத்தினருக்கு ஏற்படும் "கொடூரமான நிலைமைகளை" இம்ரான் கான் முன்னிலைப்படுத்தவில்லை என்றும் வெல்ஸ் விமர்சித்தார்.
Advertisment
Advertisements
சீனா பாகிஸ்தானின் அனைத்து வகையிலான நட்பு நாடாகும். குறிப்பாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பனிப்போர் காலத்தில், அதன் முன்னாள் கூட்டாளிக்கான உதவியைக் குறைத்ததிலிருந்து, அமெரிக்க-பாகிஸ்தான் உறவுகள் சீனாவுடனான அதன் சமீபகால தீவிரவாத நட்பால் கசந்துள்ளது.
பல நூற்றாண்டுகளாக சீனாவில் இஸ்லாம் அதன் பின்பற்றலைக் கொண்டுள்ளது. நியூயார்க் டைம்ஸ் அறிக்கையின்படி, தற்போது 22-23 மில்லியன் முஸ்லிம்கள் உள்ளனர், 1.4 பில்லியன் கொண்ட ஒரு நாட்டில் அவர்கள் சிறுபான்மையினர் ஆகிறார்கள். அவர்களில், ஹுய் மற்றும் உய்குர்கள் மிகப்பெரிய இனக்குழுக்களைக் கொண்டவர்கள். உய்குர்கள் முதன்மையாக சின்ஜியாங்கில் வாழ்கின்றனர், ஆனால் ஹுய் நாடு முழுவதும் சிதறிக்கிடந்து வாழ்கிறார்.
உய்குர்களிடம் தவறாக நடந்து கொள்வதை சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது. ஆனால், தீவிரவாதத்தையும் வன்முறையையும் எதிர்ப்பதில் மிகவும் வெற்றிகரமாக உள்ளது என்று சீனா கூறுகிறது. சமீபத்திய ஆண்டுகளில் ஜின்ஜியாங்கில் நூற்றுக்கணக்கானோர் இறந்துள்ளனர், இதற்கு இஸ்லாமியவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் மீது பெய்ஜிங் குற்றம் சாட்டியது.