‘மெலிசா’ புயல் கண்பகுதியில் அமெரிக்க விமானப்படை விமானம் பறந்தது ஏன்?

அமெரிக்க விமானப்படையின் "சூறாவளி வேட்டைக்காரர்கள்" (Hurricane Hunter) குழுவினர் படமாக்கிய இந்தக் காட்சிகள், விமானம் புயலின் மையப்பகுதி வழியாகச் சென்றபோது காணப்பட்ட "ஸ்டேடியம் எஃபெக்ட்" எனப்படும் அரிய வானிலை நிகழ்வைக் காட்டுகிறது.

அமெரிக்க விமானப்படையின் "சூறாவளி வேட்டைக்காரர்கள்" (Hurricane Hunter) குழுவினர் படமாக்கிய இந்தக் காட்சிகள், விமானம் புயலின் மையப்பகுதி வழியாகச் சென்றபோது காணப்பட்ட "ஸ்டேடியம் எஃபெக்ட்" எனப்படும் அரிய வானிலை நிகழ்வைக் காட்டுகிறது.

author-image
WebDesk
New Update
Hurricane 2

"சூறாவளி வேட்டைக்காரர்கள்" என்று அழைக்கப்படும் அமெரிக்க விமானப்படை ரிசர்வ் குழுவினர் திங்கள்கிழமை தேசிய புயல் எச்சரிக்கை மையத்திற்கான தரவுகளைச் சேகரிக்க மெலிசா சூறாவளியின் மையப்பகுதி வழியாக பறந்தனர். Photograph: (X/@FlynonymousWX)

2025-ம் ஆண்டின் உலகின் மிக வலிமையான புயலான - 'மெலிசா' புயலின் கண் பகுதிக்குள் அமெரிக்க விமானப்படை விமானம் திங்கள்கிழமை பறந்தது. தேசிய புயல் எச்சரிக்கை மையத்திற்கு (National Hurricane Center - NHC) முக்கியமான தரவுகளைச் சேகரிப்பதே இதற்கான காரணம்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க:

தேசிய புயல் எச்சரிக்கை மையத்திற்குத் தரவுகளைச் சேகரிப்பதற்காக, அமெரிக்க விமானப்படையின் ரிசர்வ் குழுவான "சூறாவளி வேட்டைக்காரர்கள்", திங்கள்கிழமை 'மெலிசா' பயலின் கண் பகுதிக்குள் பறந்து சென்றனர். (X/@FlynonymousWX)

புயலின் கண் பகுதியில் என்ன நடந்தது?

இந்தச் சூறாவளி வேட்டைக்காரர்கள் படமாக்கிய காணொளிகள், விமானம் புயலின் மையப்பகுதி வழியாகப் பிரித்துச் சென்றபோது, "ஸ்டேடியம் எஃபெக்ட்" எனப்படும் அரிய வானிலை நிகழ்வைக் காட்டுகிறது. இதில், கோபுரம்போன்ற மேகச் சுவர்கள், அமைதியான நீல மையத்தைச் சுற்றி வளைந்து காணப்பட்டன.

வீடியோவைப் பாருங்கள்:

Advertisment
Advertisements

விமான ஓட்டி (@FlynonymousWX) எக்ஸ் தளத்தில், “மெலிசாவின் மூன்றாவது சுற்றுப் பயணம். பக்கவாட்டு ஜன்னலில் அல்ட்ரா ஹை ரெஸ் 8K-ல் படப்பிடிப்புக்கு கோப்ரோ (GoPro) கேமரா பயன்படுத்தப்பட்டது” என்று விவரித்துள்ளார். கடந்த கால ஆபத்தான பயணங்களை ஒப்பிடுகையில், இந்த விமானப் பயணம் "மிகவும் சக்தி வாய்ந்ததாகவும், ஆனால் ஒப்பீட்டளவில் நேரடியானதாகவும்" இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிசிசிப்பியைத் தளமாகக் கொண்ட அமெரிக்க விமானப்படை ரிசர்வின் 53-வது வானிலை உளவுப் படைப்பிரிவால் எடுக்கப்பட்ட இந்தக் காட்சிகள், புயலின் வலிமை, திசை மற்றும் தாக்கத்தை மாதிரியாக்க (model) அமெரிக்க தேசிய புயல் எச்சரிக்கை மையத்திற்கு மிகவும் முக்கியமான தரவுகளைச் சேகரிக்கும் பணியின் ஒரு பகுதியாகும்.

மணிக்கு 175 மைல்கள் (282 கிமீ/ம) வேகத்துடன், ஐந்தாம் வகை புயலான 'மெலிசா', 2025-ம் ஆண்டின் உலகின் மிக வலிமையான புயலாக உள்ளது.

ஜமைக்கா: 174 ஆண்டுகளில் இல்லாத மிக வலிமையான புயல்

'மெலிசா' புயல் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஜமைக்காவில் கரையைக் கடந்தது. மணிக்கு அதிக வேகமுள்ள காற்றும், இடைவிடாத மழையும் தீவு முழுவதும் கொட்டித் தீர்த்தது. தேசிய புயல் எச்சரிக்கை மையம், ஜமைக்காவின் தெற்குக் கடற்கரையில் 13 அடி உயரத்திற்கு அலைகள் எழும்பும் என்றும், இதனால் "பேரழிவு மற்றும் உயிருக்கு ஆபத்தான" வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்படும் என்றும் எச்சரித்தது.

பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னெஸ் இது குறித்துப் பேசுகையில்,  “இது எங்கள் பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் மிகவும் பயங்கரமான புயல்" என்று குறிப்பிட்டார். மேலும்,  “ஐந்தாம் வகைப் புயலை இப்பகுதியில் உள்ள எந்த உள்கட்டமைப்பாலும் தாங்க முடியாது. இப்போதைய சவால், மீட்புப் பணிகளின் வேகம்தான்” என்றும் எச்சரித்தார்.

இந்தச் புயலால் குறைந்தது 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், நிலச்சரிவுகள், மின்சாரம் துண்டிப்பு மற்றும் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். “இதனை லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள்” என்று சுற்றுச்சூழல் அமைச்சர் மேத்யூ சமுடா மக்களை வீட்டிலேயே இருக்குமாறு வலியுறுத்தினார்.

கியூபா மற்றும் பஹாமாஸ்-க்கு அச்சுறுத்தல்

ஜமைக்காவைச் சூறையாடிய பிறகு, 'மெலிசா' புயல் இப்போது கிழக்குக் கியூபா மற்றும் பஹாமாஸ் நோக்கி வேகமாகச் செல்கிறது. கியூபா அதிகாரிகள், சாண்டியாகோ டி கியூபா மற்றும் குவாண்டனாமோவில் உள்ள தாழ்வான கடலோரப் பகுதிகளில் இருந்து 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்றத் தொடங்கியுள்ளனர். 20 அடி உயரம் வரை வெள்ளப்பெருக்கு மற்றும் அலைகள் எழும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

கரீபியன் முழுவதும், 'மெலிசா' இதுவரை குறைந்தது ஏழு உயிர்களைப் பலிவாங்கியுள்ளது (ஜமைக்காவில் மூன்று, ஹைட்டியில் மூன்று, டொமினிகன் குடியரசில் ஒன்று), மேலும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். ஹைட்டி அதிகாரிகள் பயிர்கள் பெருமளவில் சேதமடைந்ததாகவும், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர், இது ஏற்கனவே மோசமான பட்டினி நெருக்கடியை மேலும் அதிகரித்துள்ளது.

Us

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: