அமெரிக்க நாட்டுனான அணு ஆயுத ஒப்பந்தத்தினை கடந்த மே மாதம் ரத்து செய்து அறிவித்தது ஈரான். அதன் தொடர்ச்சியாக அமெரிக்கா, ஈரானின் மீது பொருளாதார தடை விதித்தது.
மேலும் இந்தியா போன்ற நாடுகளிடம் அமெரிக்கா “வருகின்ற நவம்பர் 4ம் தேதிக்குள் ஈரான் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை முடித்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் பொருளாதார தடையை சந்திக்க நேரிடும்” என்று எச்சரித்துள்ளது.
கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் இந்தியாவிற்கும் ஈரானிற்கும் ஒரு நல்ல உறவு இருந்து வருகிறது. செவ்வாய் அன்று இந்தியாவிற்கான ஈரான் தூதர் மசூத் ரெஸ்வேனியன் ரஹாகி இது குறித்து பேசியுள்ளார்.
இதைப் பற்றி ஈரான் தூதரகம் “அமெரிக்காவின் பேச்சிற்கு இணங்கி, இந்தியா ஈரானிடம் இருந்து கச்சா பொருட்கள் வாங்குவதை நிறுத்திவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்று எச்சரித்து இருக்கிறது.
மேலும், இந்தியா உலக அரசியல் மையத்தில் மாட்டிக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் இருப்பதை புரிந்து கொள்ள இயலுகிறது. இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் எவ்வளவு முக்கியமோ அதே போல் இந்தியாவில் இருந்து ஈரானிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களும் எங்களுக்கு முக்கியம். அதனால், இந்தியா இது தொடர்பாக யோசித்து முடிவெடுக்கும் என்று நம்புகிறோம் என்று கூறியுள்ளது.
“இருநாட்டிற்கும் இடையே நல்லுறவு நிலைக்கவே நாங்கள் விரும்புகிறோம். இந்தியா கச்சா எண்ணெய்யை ஈரான் தவிர்த்து ரஷ்யா, சவுதி அரேபியா, அமெரிக்கா, ஈராக் ஆகிய நாடுகளிடம் இருந்து வாங்க முற்பட்டால், இந்தியாவிற்கு இதுவரை அளித்து வந்த சிறப்புச் சலுகைகள் அனைத்தையும் ரத்து செய்வோம் என்றும் அறிவித்திருக்கிறார்” ஈரான் தூதர்.
இந்தியா, தென்கிழக்கு ஈரானில் இருக்கும் சபாஹர் துறைமுகத்தினை மேம்படுத்துவதற்காக உதவி செய்வதாக கூறியது. அதுகுறித்து இந்தியா இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார். ஆனால் இந்தியாவிற்கு எந்த ஒரு தொய்வும் இன்றி கச்சா எண்ணெய்யை தொடர்ந்து அனுப்புவதில் ஈரான் என்றும் முனைப்புடன் செயல்படும் என்று கூறியிருக்கிறார் மசூத் ரெஸ்வேனியன் ரஹாகி.