/tamil-ie/media/media_files/uploads/2018/11/d651.jpg)
இலங்கை நாடாளுமன்றம் கலைப்பை எதிர்த்து வழக்கு: ரணில் விக்ரமசிங்கே கட்சி முடிவு
இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே கடந்த 26-ம் தேதி அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை பிரதமராக நியமித்து, அதிபர் மைத்திரிபால சிறிசேனா பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். அதேநேரம் சபாநாயகர் கரு ஜயசூர்ய, `ரணில் பிரதமராக தொடர்வார்' என அறிவித்தார். இதேபோல் தமிழ் அமைப்புகளும் ரணிலுக்கே ஆதரவு என அறிவித்தனர். இதனால் இலங்கை அரசியலில் உச்சகட்ட குழப்பம் நிலவி வந்தது.
இதனால், கடந்த 7-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நாடாளுமன்றம் முடக்கப்படுவதாக அதிபர் சிறிசேனா அறிவித்தார். இதற்கு சபாநாயகர் கரு ஜயசூர்ய, அந்நாட்டு எதிர்க்கட்சிகள், ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஒருவழியாக எதிர்ப்புக்குப் பணிந்த சிறிசேன வரும் 14-ம் தேதியன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்றத்தைக் கூட்ட உத்தரவு பிறப்பித்தார். அப்போது பெரும்பான்மையை ராஜபக்சே நிரூபிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ராஜபஷேவுக்கு போதுமான ஆதரவு கிடைக்காத நிலையில், நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நடைபெறுவதை தவிர்க்கும் வகையில், இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் மைத்திரிபால சிறிசேனா நேற்று அதிரடியாக உத்தரவிட்டார்.
இதையடுத்து, 2019-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி இலங்கையில் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து நவ.12ஆம் தேதி ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி கட்சி அந்நாட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்கின்றன. நீதிமன்றம் தலையிட்டு சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்யவும், சர்வாதிகார நடவடிக்கைகளில் இருந்து ஜனநாயகத்தை பாதுகாக்கவும் வழக்கு தொடரப்படும் என ஐக்கிய தேசிய கட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க - இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: தமிழக தலைவர்கள் கடும் கண்டனம்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.