பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வர இலங்கையில் முதலீடுகளை தொடர இந்தியா உதவும் என்று இந்தியத் தூதர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. எரிவாயுறு தட்டுப்பாடு, பொருட்களின் விலை உயர்வு, உணவுப் பற்றாக்குறை என்று மக்கள் கடும் நெக்கடியான சூழலில் தவித்தனர். மக்களின் நிலை மோசமடைய, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் கடந்த மார்ச் மாதம் முதல் இலங்கையில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது. அதிபர் கோத்தபய ராஜபக்சே மால்தீவுக்கு குடும்பத்துடன் தப்பிச்சென்றார். ராஜினாமா கடிதத்தை சமர்பித்தார். இந்நிலையில் பிரதமரும் தலைமறைவானார். மேலும் நாளை இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக இந்தியத் தூதர் கோபால் பாக்லே அளித்த பிரத்யேக பேட்டியில் “ இலங்கை தற்போது ஒரு பெறும் மாற்றத்தை சந்தித்துள்ளது. இந்த மாற்றம் எளிமையான விஷயமாக இல்லையென்றாலும், இதை இலங்கை மக்கள் விரைவில் கடந்துவிடுவார்கள். இந்தியா தொடர்ந்து இலங்கைக்கு துணையாக நிற்கிறது. 4 மில்லியன் டாலர் வரை இலங்கைக்கு இந்தியா வழங்கி உள்ளது. மேலும் கூடுதல் முதலீடுகளை இலங்கைக்கு இந்தியா அறிமுகம் செய்ய உள்ளது.
இதனால் தற்போதைய நெருக்கடி நிலை விரைவில் மாறிவிடும். ஜனாநயக அடிப்படையில் தற்போதைய சிக்கலுக்கு தீர்வுகாண்பது தொடர்பாக இலங்கையுடன் உரையாடினோம். இலங்கையுடனான உறவுக்கு இந்தியா எப்போதும் முக்கியத்துவம் அளித்துள்ளது. கலாச்சார ரீதியாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இந்நிலையில் தற்போது இலங்கை சந்தித்து வரும் நெருக்கடியிலிருந்து மீள இந்தியா 4 பில்லியன் டாலர்கள் வழங்கியுள்ளது. 3.8 பில்லியன் டாலர் வழங்குவதாக இருந்தது. இந்நிலையில் கடந்த 6 மாதங்களில் 4 பில்லியன் டாலர்களை வழங்கி உள்ளோம். இதன் மூலம் வெளிநாடுகளிருந்து, எரிவாயு, உரம், உணவு, மருந்துகளை இலங்கை இறக்குமதி செய்ய முடியும். இலங்கையில் நடைபெறும் உள்நாட்டு போராட்டங்கள் தொடர்பாக என்னால் எந்த கருத்தையும் தெரிவிக்க இயலாது.
இலங்கை சந்தித்த தொடர் பொருளாதார நெருக்கடியால், சுற்றுலாத்துறை பாதித்ததோடு மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவிற்கு ஏற்படும் நன்மைகள்
நமக்கும் இலங்கைக்குமான கடல் வழி உறவு மிக முக்கியமாக கருத்தப்படுகிறது. கடல் வழி கண்காப்பில் இலங்கை முக்கிய பங்காற்றுகிறது. மேலும் இந்தியாவின் பாதிகாப்பு என்று மட்டும் கூறயிலாது. 2019ம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற தாக்குதலின்போது, அதன் விசாரணையில் இந்தியா ஒத்துழைத்தது. மேலும் ஒட்டுமொத்தமான பாதுகாப்புக்கு இரு நாடுகளின் ஒத்துழைப்பும் அவசியமாகிறது. இது தொடர வேண்டும்.
இலங்கை தமிழர்கள்
புதிய அதிபர் பதவியேற்றதும் இலங்கை தமிழர்கள் தொடர்பாக பேசுவோம். இலங்கை குடிமக்கள் மற்றும் இலங்கை தமிழர்கள் தொடர்பாக இலங்கை சட்டத்தின் படி ஒரு தெளிவான ஒப்பந்தம் உள்ளது. சரியான அதிகாரப் பகிர்வு தொடர்பாக இலங்கையின் 13வது சட்டதிருத்தம்தான் எங்களின் நிலைபாடும். இலங்கை தமிழர்கள் வாழும் பகுதியிலும், இலங்கை முழுவதிலும் வளர்ச்சி ஏற்பட தொடர்ந்து எங்களது ஆதரவு இருக்கும். என்று அவர் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.