Advertisment

பிலிப்பைன்ஸ் கடற்கரையில் பிகினியில் வந்த இளம் பெண்ணை கைது செய்து அபராதம் விதித்த போலீஸ்

Woman Arrested and fined for Wearing Bikini: பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள புகா கடற்கரையில் பார்ப்பவர்களை திகைக்க வைக்கும்படி பிகினி நீச்சலுடையில் வந்த பெண்ணை அந்நாட்டு போலீசார் கைது செய்து அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பிய சம்பவம் நடைபெற்றுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bikini, blast in Philippines, philippines, Police arrest woman, Revealing outfit, Woman Arrested for Wearing Bikini, பிலிப்பைன்ஸ், பிகினியில் வந்த பெண் கைது, பிகினியில் வந்த பெண்ணுக்கு அபராதம், woman wearing bikini, fined a hefty amount after donning a revealing, popular tourist island of Boracay in Philippines, string bikini, Taiwan woman, woman arrested for bikini

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள பிரபல சுற்றுலாத் தீவான போரோகெயில் அக்டோபர் 9 ஆம் தேதி ஒரு 26 வயதான இளம் பெண் அதிக அளவில் உடலை வெளிப்படுத்தும்படியான பிகினி நீச்சலுடையில் கடற்கரைக்கு வந்துள்ளார். அவருடை பிகினி பார்ப்பவர்களை திகைக்க வைக்கும்படி இருந்ததால் போலீசார் அவரை எச்சரித்துள்ளனர். ஆனால், அந்தப் பெண் தொடர்ந்து மறுநாளும் அதே போல வந்ததால் அந்நாட்டு போலீஸார் அவரை கைது செய்து பெரிய அளவில் அபராதம் விதித்து அனுப்பியுள்ளனர்.

தைவானைச் சேர்ந்த அந்த பெண் புகா கடற்கரையில் தனது காதலனுடன் விடுமுறையில் இருந்துள்ளார். தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் பிகினி அணிந்து சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

இது குறித்து பிலிப்பைன்ஸ் செய்தி நிறுவனம் கூறுகையில், “பொருத்தமில்லாத உடைக்காக ஹோட்டல் ஊழியர்களால் அந்தப் பெண் எச்சரிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவர் அதற்கு இது ஒரு கலை வெளிப்பாடு என்றும் இது தனிப்பட்ட வெளிப்பாடு சம்பந்தமான விஷயம் என்று கூறியுள்ளார்.

அந்த பெண் பிகினி உடையில் கடற்கரைக்கு வந்தபோது அவரைப் பார்த்தவர்கள் பலரும் திகைத்துப்போயுள்ளனர். இதனால், அவர் அதிகாரிகளால் எச்சரிக்கப்பட்டு மறுநாள் அந்த பெண்ணை பிலிப்பைன்ஸ் காவல்துறையின கண்காணித்துள்ளனர்.

இது குறித்து நகராட்சி காவல்துறை தலைவர் ஜெஸ் பெலோன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அந்த பெண் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழை அணிந்திருந்த பிகினி உடை காரணமாக அப்பகுதியில் உள்ளவர்கள், சுற்றுலாப் பயணிகள் பலரும் அவரை புகைப்படம் எடுத்தனர்.” என்று தெரிவித்துள்ளார்.

அந்த பெண்ணை அதிகாரிகள் எச்சரித்தபோது உடன் இருந்த அவருடை காதலன், இது நம் நாட்டில் இயல்பானது என்று கூறி அந்த பெண்ணின் ஆடையை ஆதரித்துள்ளார். இருப்பினும், அதிகாரிகள் “வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பிலிப்பைன்ஸ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை மதிக்கும் வகையில் சரியான அலங்காரத்தை அக்டைபிடிக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.

மெயில் ஆன்லைன் செய்திப்படி, இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பழமைவாத அதிகாரிகள், பிலிப்பைன்ஸ் கலாச்சாரத்தை மதிக்கும் வகையில் சரியான ஆடை அலங்காரத்தைக் கடைபிடிக்குமாறு சுற்றுலாப் பயணிகளை வலியுறுத்தியுள்ளனர்.

Philippines
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment