Advertisment

மிரட்டும் கொரோனா... மிரண்டு போன வல்லரசுகள்... அசராமல் நிற்கும் பெண் தலைமைகள்!

மற்ற நாடுகள் பெரிதும் அஞ்சி, எடுக்க தயங்கும் முடிவுகளை சட்டென எடுத்துவிடுகின்றனர் இந்த பெண் தலைவர்கள்

author-image
Nithya Pandian
புதுப்பிக்கப்பட்டது
New Update
Jecinda Ardern, Angela Merkal, Sophie Wilmès, sanna marin, Katrín Jakobsdóttir, Mette Frederiksen

Jecinda Ardern, Angela Merkal, Sophie Wilmès, sanna marin, Katrín Jakobsdóttir, Mette Frederiksen

women leaders around the world ferociously fight against covid 19 : உலகின் மிகப் பெரும் ஆளுமைகளாக காணப்படும் அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெய்ன், கனடா போன்ற நாடுகள் மிகவும் மோசமாக கொரோனா நோய்க்கு ஆளாகியுள்ளது. அமெரிக்காவில் மிகவும் மோசமாக பின்படுத்தப்பட்ட கொள்கையின் விளைவே ஆயிரக்கணக்கான மனிதர்களின் உயிரிழப்பிற்கு காரணமாக அமைந்துள்ளது.

Advertisment

பொதுவாக பெண்களின் திட்டங்கள், நடவடிக்கைகள் (வீடானாலும் சரி, அலுவலகம் என்றாலும் சரி, நிர்வாகம் என்றாலும் சரி) வெறுமனே, அவளுக்கென்ன தெரிந்துவிடப் போகிறது என்ற மனநிலைமையோடே பார்க்கப்படுகிறது. ஆனால் மற்ற நாடுகள் பெரிதும் அஞ்சி, எடுக்க தயங்கும் முடிவுகளை சட்டென எடுத்துவிடுகின்றனர் என்று தான் கூற வேண்டும். ஜெர்மனி, பெல்ஜியம், நியூசிலாந்து, ஐஸ்லாந்து, டென்மார்க் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளை தலைமை ஏற்று நடத்தி வருகின்றனர் பெண்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

நியூசிலாந்து (Jecinda Ardern)

நியூசிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னின் நிர்வாகத்தினை நாம் வெகுநாட்களாகவே பார்த்து வருகின்றோம். க்றைஸ்ட் சர்ச் தீவிரவாத தாக்குதலின் போது, சிறுபான்மையினருக்கு ஆதரவாக அவர் எடுத்த முயற்சிகள் பெரும் வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றுத் தந்தது. தற்போது அந்நாட்டில் 1300 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கு நபர்கள் மட்டுமே உயிரிழந்த நிலையில் 450க்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஜெர்மனி (Angela Merkal)

ஜெர்மனியில் இதுவரை 1.25 லட்சம் நபர்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நாட்டின் சான்சிலர் ஏஞ்சலா மார்க்கல் சிறப்பாக நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். வாரம் தோறும் 5 லட்சம் நபர்களுக்கு அங்கே பரிசோதனை நடைபெற்று வருகிறது. ஐரோப்பாவின் மிகச்சிறந்த பொருளாதார பின்புலம் கொண்ட ஜெர்மனி 808 பில்லியன் அமெரிக்க டாலர்களை (750 பில்லியன் யூரோக்கள்) கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்கு நிதியாக ஒதுக்கி உள்ளது. இதன் மூலம் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் படுக்கை வசதிகள் இருமடங்காக்கப்படும். வேலையில்லாத நபர்கள் அரசிடம் இருந்து பெறும் நல உதவிகளுக்கான தகுதிகள் தளர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக 10 பில்லியன் யூரோக்கள் வேலையில்லாதவர்களுக்கு வழங்கப்படும். சிறு குறுந்தொழில்களின் நஷ்டத்தை ஈடுகட்ட 15 ஆயிரம் யூரோக்கள் வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க : 3 வாரம் வீட்டை விட்டு வெளியேறவில்லை! ஆனாலும் கொரோனா… அதிர்ச்சியில் அமெரிக்கப் பெண்!

பெல்ஜியம் (Sophie Wilmès)

பெல்ஜியம் நாட்டின் பிரதமர் ஷோபி வில்மெஸ் மார்ச் மாதத்தின் துவக்கத்திலேயே அந்நாட்டில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துவிட்டார். அப்போது தான் பெல்ஜியம் நாட்டுக்கு பெண் ஒருவர் பிரதமராக இருக்கிறார் என்பதே பலருக்கும் தெரியும். ஆக்ஸிடெண்டல் பிரைம் மினிஸ்டர் தான். முழுமையாக அதிகாரம் அவர் கையில் வழங்கப்படாத சூழலில், கடந்த அக்டோபர் மாதம் முதல் அவர் வெறும் கேர் டேக்கராகவே இருந்தார். ஆனால் தற்போது 10 கட்சிகள் அவருக்கு அவசர கால அதிகாரங்களை (emergency powers) அடுத்த 6 மாதங்களுக்கு வழங்கியுள்ளது. போர்ச்சுகல், இத்தாலி மற்றும் க்ரீஸ் நாட்டுக்கு அடுத்து அதிக அளவில் பணம் படைத்த நாடாக இருக்கிறது பெல்ஜியம். அவசரகால அதிகாரம் தரப்பட்ட உடனே மார்ச் 12ம் தேதி பள்ளிகள், கல்லூரிகள், பார்கள், உணவகங்கள் என அனைத்தையும் மூடக் கூறி உத்தரவு பிறப்பித்தார். கொரோனா நிலவரம் தொடர்பாக முழுமையான தகவல்களை மக்களுக்கு தெரிவிக்க சயிண்டிஃபிக் டாஸ்க் ஃபோர்ஸினை உருவாக்கியுள்ளார். இவரின் தொடர் நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்ட மக்கள், #keepshophie என்று ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

40 ஆயிரம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்ற நிலையில், 3,903 இறப்புகள் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஷோஃபி மக்களுக்கு பொய்யான தகவல்களை சொல்வதில்லை. இதற்கு முன்பு பேரிடர் காலங்களில் பெல்ஜியம் அரசு மேற்கொண்ட முயற்சிகளை காட்டிலும் சீரிய முறையில் பணியாற்றி வருகிறார் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.

பின்லாந்து (Sanna Marin)

பின்லாந்து நாட்டின் 49வது பிரதமர் ஆவார் சன்னா மரீன். உலகின் மிக இளம் வயது பிரதமர் மற்றும் பின்லாந்தின் மிகவும் இளம் வயது பிரதமராவார். 34 வயதான இவர், பின்லாந்து நாட்டில் மே 13ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த நாட்டில் 3000 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு பாதிப்படைந்துள்ளனர். பாரம்பரிய ஊடகங்களாக பார்க்கப்படும் டிவி, ரேடியோவை கடந்து மக்கள் மத்தியில் கொரோனா விழிப்புணர்வு சென்று சேர வேண்டும் என சோசியல் மீடியோ இன்ஃபுளுயென்சர்களை விழிப்புணர்வு குறித்து எழுதக் கோரி வேண்டுகோள் விடுத்திருக்கிறார் மரீன்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

ஐஸ்லாந்து (Katrín Jakobsdóttir)

ஐஸ்லாந்து நாட்டின் 28வது பிரதமராக 2017ம் ஆண்டு பதவியேற்றார் கேத்ரின் ஜாகோப்ஸ்டோட்டிர்.   3 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் 1300 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஆனால் மற்று நாடுகளைப் போன்று இங்கு எந்த தொழிலும் முடக்கப்படவில்லை. மாறாக கஃபேக்கள், பப்புகள், ஷாப்புகள் நடந்து கொண்டே இருக்கிறது. பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளது. ஒருவர் இந்நேரத்தில் நிச்சயமாக ஐஸ்லாந்து போகலாம். ஆனால் இது எப்படி சாத்தியமானது என்றால், அங்கு எடுக்கப்படும் பரிசோதனைகள். தென்கொரியாவை காட்டிலும் 30 மடங்கு கூடுதலாக இங்கு பரிசோதனை செய்யப்பட்டு குவாரண்டைன் முறைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மிட்டிகேசன் மற்றும் கண்டெய்ன்மெண்ட் என இரண்டு முறைகளும் இங்கே பின்பற்றப்பட்டு வருவதால் சமூக தொற்றாக கொரோனா மாறவில்லை. இந்த முடிவுகளை மிகவும் துரிதமாக மேற்கொண்டுள்ளார் கேத்ரின்.

டென்மார்க் (Mette Frederiksen)

ஐரோப்பிய நாடுகள் முழித்துக் கொள்வதற்கு மிகவும் முன்பே விழித்துக் கொண்ட நாடு டென்மார்க் தான். மார்ச் மாதம் 11ம் தேதியே ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது அந்நாடு. நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டு, தொழில்கள் முடக்கபப்ட்டது. மேலும் 10 நபர்களுக்கு மேலே கூட்டம் கூடுவதற்கு கடுமையான தட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. 6000 நபர்கள் பாதிக்கப்பட்ட நாட்டில் 260 மரணங்கள் நிகழ்ந்தது. மாதத்தின் ஆரம்பத்தில் இருந்தே தீவிர சிகிச்சை பிரிவுகளை அதிகரித்தல் மற்றும் தேவையான வெண்டிலேட்டர் வசதிகளை உருவாக்குதல் ஆகியவற்றில் தீவிரம் காட்டினார் மேட்டே ஃப்ரெடெரிக்சன். தற்போது மீண்டும் இயல்பு நிலைக்கு கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி வருகிறது டென்மார்க்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Finland Germany
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment