இஸ்லாமியர்களின் புனித தலமாக விளங்கும் மெக்கா மசூதியில் பெண்கள் சிலர் போர்ட் கேம் விளையாடிய புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சவூதி அரேபியாவில் உள்ள மெக்கா மசூதி உலகத்தில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களின் புனித ஸ்தலாம விளங்கி வருகிறது. இங்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.அனைத்துப் பகுதிகளில் இருந்து ஏராளமான இஸ்லாமியர்கள் புனிதப் பயணம் மேற்கொள்வதும் வழக்கம்.
இந்நிலையில், கடந்த வெள்ளியன்று, மசூதி வளாகத்தில் பர்தா அணிந்த 4 பெண்கள் (ஸ்க்யூன்ஸ்) Sequence எனப்படும் போர்ட் கேம் ஒன்றை தரையில் வைத்துக்கொண்டு விளையாடியுள்ளனர். இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் தீயாக பரவியது.
அத்துடன், இஸ்லாமிய பெண்கள் இத்தகைய செயலுக்கும் நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. கேம் போர்ட் விளையாடிய பெண்களுக்கும் தகுந்த ஆலோசனை வழங்கப்பட வேண்டும் என்றும் பலர் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த சவுதி அரேபியா அரசாங்கம் மசூதி வளாகத்தில் பெண்கள் கேம் போர்ட் விளையாடியது குறித்து விளக்கம் அறிவித்துள்ளது.
” 4 பெண்கள் மசூதி வளாகத்துக்குள் கேம்போர்ட் விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட மசூதி பாதுகாவலர்கள் அவர்களிடம் விசாரித்தனர். புனிதமான இந்த வளாகத்துக்குள் இப்படி விளையாடக் கூடாது என்று அறிவுரை கூறியதை அடுத்து அவர்கள் மன்னிப்பு கேட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்” என்று தெரிவித்துள்ளது.