இந்த தலைப்பை படித்தவர்கள் பலருக்கும் முதலில் கோபம் வந்திருக்கலாம். அதன் பின்பு எதற்கான அந்த பெண் அப்படி செய்தார்? என்று கேள்வியும் எழுப்ப தோனிருக்கும். அந்த கேள்விக்கான பதிலை நீங்கள் கண்டிபாக தெரிந்துக் கொள்வதும் அவசியம்.
கடந்த சில வாரங்களாக பேஸ்புக், ட்விட்டர் பக்கத்தில் '#ThisIsNotConsent' என்ற ஹாஷ்டேக் வைரலாக பரவி வந்தது. இந்த ஹாஷ்டேக் மூலம் பெண்கள் பலரும் உள்ளாடை புகைப்படத்தை வெளியிட்டு தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வந்தனர்.
இதற்கு காரணம், அயர்லாந்தில் ஒரு பாலியல் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு தான். அந்நாட்டில் 17 வயது இளம்பெண்ணை 27 வயதுடைய ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக ஆஜரான வழக்கறிஞர் ஒருவர், பாதிக்கப்பட்ட பெண்ணின் உள்ளாடை குறித்து விமர்சனம் செய்திருந்தார்.
அதாவது, இதுத் தொடர்பான வழக்கு நடைப்பெற்ற போது, உள்ளாடைகளை நீதிமன்றத்தில் காண்பித்து ”அந்த பெண் மிகவும் மெலிதான உள்ளாடை அணிந்திருந்தார். வழக்கில் குற்றம் செய்தவர் இதனால் தான் ஈர்க்கப்பட்டார். இப்படி ஆபாசமாக உடை அணிந்ததுதான் வன்புணர்வுக்கு காரணம் ” என்றார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ’இருவரும் விருப்பப்பட்டே பாலியல் உறவில் இருந்திருக்கலாம்’ என்று முடிவுசெய்து, குற்றம்சாட்டப்பட்ட நபரை விடுதலை செய்தார்.
இந்த விவகாரம் மற்றும் அவர் எழுப்பிய கேள்விகள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தினர். குறிப்பாக பெண்கள் மத்தியில். இதை கடுமையாக எதிர்க்கும் நோக்கி,அயர்லாந்துப் பெண் எம்.பி ருத் கோப்பிங்கர் நாடாளுமன்றத்தில் உள்ளாடையை கொண்டு சென்று யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பெரும் புரட்சியை செய்தார்.
நாடாளுமன்றத்தில் உள்ளாடை ஒன்றை திடீரென்று தூக்கி காண்பித்த அவர், இங்கு இந்த மெலிதான உள்ளாடையைக் காட்டுவது உங்களுக்குத் தர்மசங்கடமாக இருக்கலாம். அப்போது, நீதிமன்றத்தில் பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, தன் உள்ளாடை காண்பிக்கப்பட்டபோது , அவருக்கு எப்படி இருந்திருக்கும்” என்று அரங்கமே அதிரும் வகையில் கேள்வி எழுப்பினார்.
ருத் கோப்பிங்கரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பில் பாராட்டுக்கள்,மற்றும் எதிர்புகள் கிளம்பியுள்ளனர்.