உக்ரைனுக்கு 723 மில்லியன் டாலர் நிதியுதவி - உலக வங்கி

உலக வங்கி கடன் தொகுப்பில் பல நாடுகளில் இருந்து கடன்கள், கடன் உத்தரவாதங்கள், மானியங்கள் ஆகியவை ஒன்றாக சேர்த்து வழங்கப்படுகிறது.

உலக வங்கி கடன் தொகுப்பில் பல நாடுகளில் இருந்து கடன்கள், கடன் உத்தரவாதங்கள், மானியங்கள் ஆகியவை ஒன்றாக சேர்த்து வழங்கப்படுகிறது.

author-image
WebDesk
New Update
உக்ரைனுக்கு 723 மில்லியன் டாலர் நிதியுதவி - உலக வங்கி

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு, தொடர்ந்து 13 ஆவது நாளாக நீடித்து வருகிறது. பீரங்கி டேங்க் தாக்குதல், ஏவுகணை வீச்சு, வான்வழி தாக்குதல் என ரஷ்ய தனது பலத்தை பல நகரங்களில் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், உக்ரைனும் சரணடையாமல் போராடி வருகிறது.

Advertisment

கிவ், கார்கிவ் நகரில் இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல் வலுத்திருக்கிறது. சண்டையின் காரணமாக, இதுவரை 15 லட்சம் மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இரண்டாம் உலகப் போருக்கு பின், ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அகதிகள் நெருக்கடி இது என்றும் ஐநா கவலை தெரிவித்துள்ளது.

அதே சமயம், மனிதாபிமான அடிப்படையில் சில நகரங்களில் பொதுமக்கள் வெளியேற சிறப்பு வழித்தடங்கள் அமைக்கப்பட்டு தற்காலிக போர் நிறுத்தத்தையும் அறிவித்தது. ஆனாலும், பல இடங்களில் போர் நிறுத்தத்தை முறையாக ரஷ்யா கடைப்பிடிக்கவில்லை என உக்ரைன் தரப்பில் குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது.

இந்நிலையில், ரஷ்ய படையெடுப்பால் உருகுலைந்த உக்ரைனுக்கு உதவ 723 மில்லியன் டாலர் கடன்கள் மற்றும் மானியங்களின் தொகுப்பை வழங்க இயக்குநர்கள் குழு முடிவு செய்துள்ளதாக உலக வங்கி அறிவித்தது.

Advertisment
Advertisements

இந்த தொகுப்பில், முந்தைய உலக வங்கி கடன் 350 மில்லியன் டாலரும் அடங்கும். இத்துடன் நெதர்லாந்து மற்றும் ஸ்வீடனின் கடன் உத்தரவாதங்கள் மூலம் சுமார் $139 மில்லியன் அதிகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரிட்டன், டென்மார்க், லாட்வியா, லித்துவேனியா மற்றும் ஐஸ்லாந்தின் நாடுகளிலிருந்து மானியங்களாக 134 மில்லியன் டாலரும், ஜப்பானில் இருந்து 100 மில்லியன் டாலர் நிதியுதவியும் இடம்பெற்றுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ukraine World Bank

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: