World health organisation : கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் தொடர்ந்து முயன்று வருகின்றன. அதில் கம்போடியா, ஜப்பான், நியூசிலாந்து, கொரியா, ஸ்பெய்ன், வியட்நாம் போன்ற நாடுகள் பரவலை மிகவும் சிறப்பாக கையாண்டுள்ளது. ஏற்கனவே சார்ஸ், மெர்ஸ், போலியோ மற்றும் எபோலா போன்ற வைரஸ்களை கட்டுப்படுத்தியதால் ஏற்பட்ட அனுபவத்தை கொண்டு இதனை கட்டுப்பட்டுத்தியுள்ளனர்.
இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானன் கூறும் போது, இந்த தொற்று நோயால் நாம் கற்றுக் கொள்ளும் பாடம் நமக்கு மிகவும் முக்கியமானதாகும். பாகிஸ்தான் இந்த சூழலில் வீடு வீடாக சென்று குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்துகளை கொடுத்துள்ளது. கொரோனா வைரஸ் நோயையும் கட்டுப்படுத்தியுள்ளது. மேலும் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000க்கும் குறைவாக பதிவாகியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
உண்மையாகவே, பாகிஸ்தானில் பாதிப்பு குறைந்துவிட்டதா, மருத்துவ பரிசோதனைகள் குறைக்கப்பட்டுவிட்டதா போன்ற கேள்விகளை நேற்று டெட்ராஸிடம் முன்வைத்தனர் ஊடகவியலாளர்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil