பிரெஞ்சு பிரதமருக்கு கொரோனா முதல் கிறிஸ்துமஸ் அணிவகுப்பு விபத்து வரை – உலகின் டாப் 5 நிகழ்வுகள்

உலகளவில் ஓவர்நைட்டில் நடந்த 5 முக்கிய சம்பவங்களை பார்த்து தெரிஞ்சுக்கோங்க…

  1. வர்த்தக பிரச்சினைக்கு தீர்வு காணும் இந்திய – அமெரிக்கப் பிரதிநிதிகள்

இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகை தந்த அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி கேத்ரின் டாய், , சந்தை அணுகல் மற்றும் டிஜிட்டல் வர்த்தகம் போன்ற பிரச்சினைகளில் உள்ள வேறுபாடுகளைத் தீர்ப்பதற்கான வழிகளைக் கண்டறிவதாக இந்தியாவும் அமெரிக்காவும் ஒப்புக்கொண்டுள்ளது என தெரிவித்தார். டெல்லி மற்றும் வாஷிங்டன் வர்த்தகப் பிரச்சினை சரிசெய்ய இருநாடுகளும் கடந்த ஓராண்டாக பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.

கேத்ரின் டாய்க்கு, வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் விருந்து ஏற்பாடு செய்திருந்தார். அப்போது இந்திய அதிகாரிகளிடம் பேசிய டாய், பல தரப்பு பிரச்சினைகளைச் சரிசெய்து முன்னேற்றம் காண வேண்டும். இந்தியாவுடனான வர்த்தகம் பிரச்சினை தீர்வு காணும் பட்டியலில் முதலில் இருப்பதாக தெரிவித்தார். செப்டம்பரில் பிரதமர் நரேந்திர மோடியின் வாஷிங்டன் பயணத்தைத் தொடர்ந்து இந்த சந்திப்பு நடைபெறுகிறது.

  1. கிறிஸ்துமஸ் அணிவகுப்பு விபத்து குற்றவாளி ஜாமீனில் விடுவிப்பு

அமெரிக்காவின் விஸ்கான்சினில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் அணிவகுப்புக்குள் எஸ்யூவி காரை ஓட்டி 5 பேரை கொன்றது மட்டுமின்றி டஜன் கணக்கானோரைக் காயப்படுத்தியதாகக் குற்றச்சாட்டப்படும் நபருக்கு, அந்நாட்டு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

அந்த நபர், அதே நாளில் மற்றொரு வாகன விதிமீறல் சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். 39 வயதான டேரல் ப்ரூக்ஸ், விஸ்கான்சினில் உள்ள வௌகேஷாவில் வாகனத் தாக்குதல் நடந்த இடத்திற்கு அருகில் கைது செய்யப்பட்டார்.

5 பேர் இறந்தது மட்டுமின்றி 52 முதல் 81 வயது வரையிலான 48 பேர் காயமடைந்தனர்.அதில் 6 குழந்தைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  1. பிட்காயினை சட்டப்பூர்வ நாணயமாகப் பயன்படுத்தக் கூடாது – ஐஎம்எஃப் அறிவுறுத்தல்

கிரிப்டோகரன்சி தொடர்பான அபாயங்களைக் கருத்தில் கொண்டு, எல் சால்வடார் பிட்காயினை சட்டப்பூர்வ நாணயமாக பயன்படுத்தக் கூடாது என்று சர்வதேச நாணய நிதியம் (IMF)அறிவுறுத்தியுள்ளது.

பிட்காயினின் விலை ஏற்றம் இறக்கம் காரணமாக, நுகர்வோர் பாதுகாப்பு, நிதி ஒருமைப்பாடு, நிதி ஸ்திரத்தன்மை ஆகியவற்றில் அபாயத்தை ஏற்படுத்துகிறது என ஐஎம்எஃப் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

  1. முன்னாள் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோவுக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு

முன்னாள் கவர்னர் ஆண்ட்ரூ கியூமோ, பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்கான பல ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர், பணி நேரத்தில் pandemic leadership குறித்த தனது புத்தகத்தைத் தயாரிக்க உதவுமாறு மாநில ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அந்த அறிக்கையில், புத்தகத்தில் தொற்றுநோயை திறம்பட கையாண்டவர் என்பதை குறிப்பிடும் வகையில், மாநில சுகாதாரத் துறை நர்சிங் ஹோம்களில் ஏற்பட்ட கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை கணிசமாக குறைத்துள்ளனர்.

இந்த அறிக்கை நீதித்துறைக் குழுவால் பணியமர்த்தப்பட்ட ஒரு சட்ட நிறுவனத்தால் சமர்ப்பிக்கப்பட்டவை ஆகும்.

  1. பிரெஞ்சு பிரதமர் கொரோனா தொற்று உறுதி

பிரெஞ்சு பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் அண்டை நாடுகள் பெல்ஜியம், பிரான்ஸ் சென்றுவந்ததைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட சோதனையில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

காஸ்டெக்ஸ் அடுத்த 10 நாள்களுக்கான பணிகளை, தனிமையிலிருந்தபடியே செய்திடத் திட்டமிட்டுள்ளார். அவருக்கு அறிகுறிகள் இருந்ததா என்பது குறித்து, அவரது அலுவலக பணியாளர்கள் கருத்து தெரிவிக்கவில்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and International news here. You can also read all the International news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: World new today french pm covid positive india us trade issues

Next Story
‘இது என் தமிழ் சகோதர சகோதரிகளுக்காக…’ மோடி இன்று புதிய அறிவிப்பு!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com