உலக செய்திகள்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய நிகழ்வுகள் என்ன?

உலகளவில் ஓவர்நைட்டில் நடந்த 5 முக்கிய சம்பவங்களை பார்த்து தெரிஞ்சுக்கோங்க…

1. நார்வேயில் வில் அம்பு தாக்குதலில் ஐவர் உயிரிழப்பு
நார்வே நாட்டில் காங்ஸ்பெர்க் பகுதியில் உள்ள கடையில் வில் அம்பு தாக்குதல் நடத்தி 5 பேரைக் கொன்ற நபரை, காவல் துறையினர் கைது செய்தனர். இச்சம்பவத்தின் போது, காவல் துறையினருக்கும் குற்றவாளிக்கும் இடையே தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில், இரண்டு காவலர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், ஒருவர் தாக்குதல் நடந்த சமயத்தில் கடையில் ஆஃப் டியூட்டியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


2. கொரோனா பிறப்பிடத்தைக் கண்டறியும் கடைசி வாய்ப்பு – WHO

கொரோனா தொற்று எங்கிருந்து தோன்றியது என்பதை கண்டறிய புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆலோசனை குழு தான் கடைசி வாய்ப்பு என்றும், சீனாவின் முழு ஒத்துழைப்பு தேவை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா முதல் பாதிப்பு, சீனாவில் வுஹான் மாகாணத்தில் 2019 டிசம்பரில் கண்டறியப்பட்டது. சீன ஆய்வகத்திலிருந்துதான், கொரோனா பரவியது என்ற குற்றச்சாட்டை, பல முறை அந்நாட்டு அரசு நிராகரித்துவிட்டது. இதுதொடர்பான கூடுதல் ஆய்வு தேவையில்லை எனவும் அறிவுறுத்தியுள்ளது.


WHO தலைமையிலான குழு இந்தாண்டு தொடக்கத்தில் சீன விஞ்ஞானிகளுடன் வுஹானில் மேற்கொண்ட நான்கு வார ஆராய்ச்சியில், இந்த வைரஸ் வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு மற்றொரு விலங்கு மூலம் பரவியிருக்கலாம் என கண்டறிந்தனர். இருப்பினும், கூடுதல் ஆராய்ச்சி தேவை என கோரிக்கை வைக்கப்பட்டது.


3. ஆப்கான் மக்களுக்கு உணவு வழங்கி பசியாற்றும் ஏஜென்சிகள்
காபூலில் இடம்பெயர்ந்த நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு உணவு, போர்வைகள், பணத்தை சில ஏஜென்சிகள் வழங்கினர். ஏனென்றால், வரவிருக்கும் காலத்தில் கடுமையான குளிர்காலத்தை ஆப்கான் மக்கள் சந்திக்கவுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மனிதாபிமானம் அடிப்படையில் 324 குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன. 


மற்றொரு புறம், ஆப்கான் தாலிபான் வசம் உள்ளதால், மேற்கத்திய நாடுகள் ஆதரவை திரும்பப்பெற்றதால், கடுமையான பொருளாதார வீழ்ச்சியை அந்நாடு சந்தித்துள்ளது. குளிர்ந்த வானிலை காரணமாக, இடம்பெயர்ந்த மக்கள், கூடாரத்தைத் தேடி அலைந்து வருகின்றனர். மேலும், உணவு மற்றும் அடிப்படை வீட்டுப் பொருட்களை வாங்குவதற்காக ஐ.நா. வளாகத்திற்குள் மக்கள் அணிவகுத்து நிற்பதையும் காண முடிந்தது.

4. கென்ய ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீராங்கனை குத்தி கொலை
கென்ய ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீராங்கனையும், இரண்டு முறை உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்றவருமான ஆக்னஸ் டிரோப், நேற்று அவரது வீட்டில் உடலில் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். தலைமறைவாகவுள்ள அவரது கணவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். 


5. ஈரானிடம் அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் அதிருப்தி

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள், ஈரான் அரசிடம் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

அவர்கள், 2015 டெஹ்ரான் அணுசக்தி ஒப்பந்தத்தைக் ஈரான் கைவிடாவிட்டால் மட்டுமே, மற்ற விருப்பங்களைப் பரிசீலிப்பதாகத் திட்டவட்டமாக தெரிவித்தனர். இதற்கிடையில், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வியன்னாவில் அமெரிக்காவுடன் மறைமுகப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. டெஹ்ரானுக்கு தெற்கே ஃபோர்டோ என்ற இடத்தில் மலைக்கு அடியில் உள்ள ஆலையில் கடந்த 2015-ல் நிறுத்தப்பட்ட யுரேனியம் செறிவூட்டும் பணியை ஈரான் நவம்பர் மாதம் தொடங்கியது. இதன் காரணமாக ஈரான் – அமெரிக்கா இடையே மோதல் வலுத்து வந்தது. இந்நிலையில் ஜோ பைடன் தலைமையிலான புதிய நிர்வாகம் ஈரானுடன் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளைத் தீர்க்க முனைப்புக் காட்டி வருகின்றது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and International news here. You can also read all the International news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: World news afghan crisis bow and arrow attack corono origin

Next Story
உலக செய்திகள்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய டாப் 5 நிகழ்வுகள்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com