- அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை நிறுத்தம்…ஈரானால் ஐரோப்பா, அமெரிக்கா அதிருப்தி
ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக மறைமுகமாக நடந்துவந்த ஈரான்-அமெரிக்க பேச்சுவாரத்தை அடுத்த வராம் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், ஈரானின் கடுமையான அரசு விதிமுறைகளுக்கு எதிராக ஐரோப்பிய அதிகாரிகள் குரல் கொடுத்தனர்.
வியன்னாவில் நடைபெற்ற ஏழாவது சுற்று பேச்சுவார்த்தை ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி அனுப்பிய பிரதிநிதிகளுடன் நடைபெற்றது. அப்போது, பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்கு 2015 அணுசக்தி ஒப்பந்தத்தில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதுகுறித்து பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், "உடன்பாடிற்குள் வருவதற்கான நடவடிக்கையை செய்திட ஈரான் தீவிரமாக இருப்பதாகத் தெரியவில்லை, அதனால்தான் வியன்னாவில் இந்தச் சுற்றுப் பேச்சுவார்த்தையை முடித்தோம்" என்றார்.
- இந்திய-அமெரிக்க கணிதவியலாளர் நிகில் ஸ்ரீவஸ்தவாவுக்கு சிப்ரியன் ஃபோயாஸ் விருது
பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் இந்திய-அமெரிக்க கணிதவியலாளர் நிகில் ஸ்ரீவஸ்தவா, அமெரிக்கன் கணிதவியல் சங்கத்தின் (AMS) ஆபரேட்டர் தியரிக்கான சிப்ரியன் ஃபோயாஸ் பரிசுக்கு கூட்டாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது ஸ்ரீவஸ்தவாவுக்கு கிடைத்த மூன்றாவது முக்கிய பரிசு ஆகும். முன்னதாக, 2014 இல் ஜார்ஜ் பாலியா பரிசை கூட்டாகவும், 2021 இல் ஹேல்டு பரிசையும் வென்றுள்ளார்.
இந்த விருது மெட்ரிக்ஸின் சிறப்பியல்பு பல்லுறுப்புக்கோவையைப் புரிந்துகொள்வதற்கான முறைகளை அறிமுகப்படுத்தி மற்றும் மேம்படுத்தியதற்காக வழங்கப்பட்டுள்ளது.
- அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு எதிராக விசாரிக்க உத்தரவு
கோவிட்-19 தடுப்பூசிகளை எய்ட்ஸுடன் இணைத்த கருத்துக்காக அதிபர் ஜெய்ர் போல்சனாரோவை விசாரிக்குமாறு பிரேசில் உச்ச நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதிபரின் கருத்துக்கு மருத்துவர்களும், ஆராய்ச்சியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரேஸ், பிரேசிலின் செனட் நடத்திய தொற்றுநோய் விசாரணையால் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டை ஆராய மூத்த வழக்கறிஞரான அகஸ்டோ அராஸுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அக்டோபர் 24 அன்று போல்சனாரோ, பிரிட்டன் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கைகளை சுட்டிக்காட்டி முழுமையாக தடுப்பூசி போட்டவர்களின் நோய் எதிர்ப்பு குறைபாடு திறன் எதிர்பார்த்தை விட மிக வேகமாக உருவாகுவதாக கருத்து தெரிவித்தார்.
இந்த வீடியோ விதிமுறைகளுக்கு எதிரானது என கூறி பேஸ்புக், இன்ஸ்டாகிராம் நீக்கியது. பிரேதில் அதிபர் இதுவரை தடுப்பூசி எடுத்துகொள்ளவில்லை. மக்களிடமும் தடுப்பூசி போடுவதற்கு வற்புறுத்துவது கிடையாது.
- ஒமிக்ரான் மற்ற மாறுபாடுகளை காட்டிலும் ஆபத்தானவை இல்லை - சிங்கப்பூர் சுகாதாரத் துறை
ஒமிக்ரான் கொரோனா அறிகுறிகள் மற்ற வைரஸ்களை காட்டிலும் மாறுபட்டவை, தீவிரமானவை அல்லது ஒமிக்ரான் எதிரான தடுப்பூசி, சிகிச்சை முறை பலனற்றது போன்ற கருத்துகளுக்கு இதுவரை எந்த ஆதாரமும் கிடையாது என சிங்கப்பூர் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மேலும், ஒமிக்ரான் குறித்து கூடுதல் தரவுகள், மேலதிக ஆய்வுகள் தேவைப்படுகிறது. வரும் வாரங்களில் உலகளவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- மத்திய மாலியில் பயங்கரவாதிகள் தாக்குதல் - 31 பேர் பலி
மத்திய மாலியில் உள்ளூர் சந்தைக்கு மக்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில், குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அங்கு ஏற்பட்ட மிகப்பெரிய பயங்கர தாக்குதல் ஆகும். துப்பாக்கியுடன் வந்த நபர், முதலில் பேருந்து மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளார். பின்னர், பேருந்தின் டயர்களை அறுத்துவிட்டு, உள்ளே இருந்த மக்களை சுட்டுக்கொன்றுள்ளார். இவ்விபத்தில் 31 பேர் உயிரிழந்தது மட்டுமின்றி பல காயமடைந்துள்ளனர். ஒருசிலரை காணவில்லை என கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.