50 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு!
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 44.98 கோடியாக அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 கோடியை தாண்டியுள்ளது.
இதன்படி இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 50.00,10,193 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 44,98,48,549 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 4,39,55,716 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை உலகம் முழுவதும் 62,05,928 பேர் உயிரிழந்துள்ளனர்.
கிழக்கு நகரங்களில் ரஷ்யா தாக்குதல் நடத்த வாய்ப்பு
கிழக்கு நகரங்கள் மீது ரஷ்யா விரைவில் மீண்டும் தாக்குதலை தொடங்கலாம் என உக்ரைன் பாதுகாப்புப் படை எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா 48-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பல நாடுகள் முயற்சித்த போதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன.
உக்ரைன் தலைநகர் கீவ், மரியுபோல், கார்கிவ், கார்சன் உள்பட பல்வேறு நகங்களில் ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
உக்ரைனின் கிழக்கு நகரங்களான கார்கிவ், லுஹன்ஸ்க், டுனெட்ஸ்க், மரியுபோல் உள்ளிட் நகரங்கள் மீது ரஷ்யா விரைவில் மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என உக்ரைன் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
பதவி விலகுங்கள் அல்லது காரணத்தை சொல்லுங்கள் – அதிபருக்கு சொன்ன இலங்கை முன்னாள் பிரதமர்
ரஷ்ய தூதரக அதிகாரிகள் 18 பேரை வெளியேற்றிய குரேஷிய அரசு
ரஷிய தூதரக அதிகாரிகள் 18 பேரை குரேஷிய அரசு, அந்நாட்டைவிட்டு வெளியேற்றி உள்ளது.
உக்ரைனில் போர் தொடுத்து வரும் ரஷ்யா மீது, உலக நாடுகள் பலவும் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
அதோடு இந்த விவகாரத்தில் ரஷியாவுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் விதமாக, சில நாடுகள் தங்கள் நாட்டில் உள்ள ரஷிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றி வருகின்றன.
துப்பாக்கி கலாசாரத்தை ஒழிக்க பைடன் அரசு விரைவில் கட்டுப்பாடு அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக துப்பாக்கி கலாசாரம் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெருகி வருகிறது.
பள்ளிக்கூடம், வணிகவளாகம், கேளிக்கை விடுதி, மதுபான கூடம் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.
எனவே துப்பாக்கி கலாசாரத்தை ஒழிக்க துப்பாக்கி வினியோகம் மற்றும் பயன்பாட்டில் கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டுவர வேண்டுமென மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதுபோன்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்களை தவிர்க்கும் விதமாக தனியாரால் தயாரிக்கப்பட்ட வரிசை எண்கள் இல்லாத துப்பாக்கிகளை கட்டுப்படுத்த அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் புதிய விதிமுறைகளை வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “