உக்ரைன் போரால் 170 கோடி பேர் வறுமையில் தள்ளப்படுவார்கள் என்று ஐ.நா. தலைவர் கவலை தெரிவித்து உள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் கடந்த பிப்ரவரி 24ந்தேதி படையெடுத்தது.
ரஷ்யா நடத்தி வரும் இந்த போர் இன்று 54வது நாளாக நீடித்து வருகிறது. போரில் இரு நாட்டு வீரர்கள் தரப்பிலும் ஆயிரக்கணக்கில் உயிரிழந்தனர்.
பொதுமக்களில் பலர் கொல்லப்பட்டும் உள்ளனர். இந்த போரால் மனித இனத்தில் ஐந்தில்
ஒரு பங்கு சதவீதத்தினருக்கும் கூடுதலானோர் வறுமை, பசியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என ஐ.நா. பொது செயலாளர் அன்டானியோ குட்டெரெஸ் கவலை தெரிவித்துள்ளார்.
உக்ரைனிய படையில் 470 ஆளில்லா விமானங்கள் அழிப்பு-ரஷ்யா
உக்ரைனிய படையில் 470 ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளன என ரஷ்யா தெரிவித்துள்ளது.
இதுவரை மொத்தம் 136 விமானங்கள், 471 ஆளில்லா விமானங்கள், 249 விமானங்களை தாக்கி அழிக்கும் ஏவுகணை சாதனங்கள், 2,308 பீரங்கிகள் மற்றும் பிற கவச வாகனங்கள், 254 பல ஏவுகணைகளை ஒரே நேரத்தில் ஏவும் சாதனங்கள், 998 பெரிய ரக துப்பாக்கிகள் மற்றும் பீரங்கி குண்டுகள் மற்றும் 2,171 சிறப்பு ராணுவ வாகனங்கள் ஆகியவை அழிக்கப்பட்டுள்ளன என்று ரஷ்ய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறினார்.
ரஷ்ய கப்பல்களுக்கு பல்கேரியா தடை
உக்ரைன் மீது போர் தொடுத்ததால் ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன.
அந்த வகையில் ரஷ்ய கொடி தாங்கிய கப்பல்கள் அனைத்தும் கருங்கடல் துறைமுகங்களுக்குள் நுழைய பல்கேரியா தடை விதித்துள்ளது.
இதை அந்த நாட்டின் கடல்சார் ஆணையம், தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
முதல்வரான பாக்., பிரதமரின் மகன்.. அமெரிக்க முக்கிய பதவியில் இந்திய வம்சாவளி பெண்.. மேலும் செய்திகள்
தலையணைகளை வைத்து சண்டை போட்ட அமெரிக்கர்கள்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தலையணைகளை வைத்துக் கொண்டு வீதியில் அமெரிக்கர்கள் சண்டைபோட்டுக் கொண்டனர்.
என்ன இது தலையணை சண்டை என்று யோசிக்கிறீர்களா? ஆமாம். விளையாட்டாக வீட்டில் சண்டைப் போட்டுக் கொள்ளும்போது தலையணைகளை வைத்து தாக்குவார்கள் இல்லையா? அதையே தான் பொதுவெளியில் செய்கிறார்கள்.
இதற்காக சர்வதேச தலையணை சண்டை தினம் என்ற நாளும் கொண்டாடப்படுகிறது.
மிருதுவான தலையணைகளை கொண்டு தான் பிறரை தாக்க வேண்டும் என்பது விதிமுறை ஆகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil