உக்ரைனுக்கு பைடன் செல்லும் திட்டமில்லை-வெள்ளை மாளிகை
உக்ரைனின் தலைநகரான கிவிவ் நகருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரும் யோசனை எதுவும் இல்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்தது.
இதனை வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் ஜென் ப்சாகி தெரிவித்தார்.
இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.338க்கு விற்பனை!
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84 அதிகரித்து ரூ.338க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.113 அதிகரித்து ரூ.289க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்த விலை உயர்வால் இலங்கை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை குடிமகன் கொலை வழக்கு-6 பேருக்கு தூக்கு தண்டனை
பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் இலங்கை பிரஜயை கொலை செய்த வழக்கில் 6 பேருக்கு அந்நாட்டு பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 67 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இலங்கை மீனவர்களுக்கு தீராத மீன்பிடி வலை பிரச்னை-நெடுந்தீவில் என்ன நடக்கிறது?
கொரோனா அப்டேட்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 கோடியே 50 லட்சத்து 39 ஆயிரத்து 524 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4 கோடியே 23 லட்சத்து 58 ஆயிரத்து 988 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 45 கோடியே 64 லட்சத்து 56 ஆயிரத்து 90 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 62 லட்சத்து 24 ஆயிரத்து 446 பேர் உயிரிழந்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“