இலங்கையில் பொது நிகழ்ச்சிகளில் முக கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் தற்போது கொரோனா மெல்ல மெல்ல தலைதூக்க தொடங்கி உள்ளது. இதனால் டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் முககவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலும் கொரோனா வேகம் எடுத்துள்ளது. ஏற்கனவே அங்கு பொருளாதார சீரழிவில் சிக்கி தவிக்கும் நிலையில் கொரோனா பரவலும் பொதுமக்களை அச்சுறுத்த தொடங்கி உள்ளது.
இதனால் இலங்கையில் பொதுநிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் முககவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
96ஆவது பிறந்த நாளை கொண்டாடிய ராணி எலிசபெத்
பிரிட்டன் அரசியாக 1952இல் பதவியேற்ற எலிசபத் ராணி, பிரிட்டனின் மிக நீண்ட காலம் பதவி வகுக்கும் அரசியாக தொடர்கிறார்.
அவரின் 96ஆவது பிறந்த தினத்தை, நேற்று சான்டிர்ங்ஹாம் பண்ணை வீட்டில் குடும்பத்தினருடன் கொண்டாடினார்.
லண்டன் ஹைட் பூங்காவில் பிரட்டன் ராணுவத்தின் மன்னர் பிரிவு படையினர், பீரங்கிகளை வெடித்து, அரசிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இம்ரான் கான் பகிரங்க குற்றச்சாட்டு
பாகிஸ்தானில் தனது ஆட்சி கவிழ காரணம் ராணுவ தளபதிதான் என்று இம்ரான்கான் மறைமுகமாக குற்றம் சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இம்ரான்கானும் 5 ஆண்டு தொடர்ந்து ஆட்சி நடத்த முடியாமல் போனது. இது அவருக்கு மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ஆட்சி கவிழ்ப்புக்கு அமெரிக்காவை மறைமுகமாக குற்றம் சாட்டி வந்த இம்ரான்கான், இப்போது திடீரென என ராணுவ தளபதி கமர் ஜாவித் பஜ்வாவை பெயர் குறிப்பிடாமல் காரணம் காட்டி சாடி இருப்பது புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
பிலிப்பைன்சில் நிலநடுக்கம்.. நெட்பிளிக்ஸ் சந்தாதாரர்கள் சரிவு.. மேலும் செய்திகள்
சிஎன்என்+ சர்வீஸை நிறுத்தியது வார்னர் பிரதர்ஸ்
முக்கிய செய்தி நிறுவனங்களில் டிஜிட்டல் சந்தாக்களின் வளர்ச்சியைப் பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியில் CNN கடந்த மாத இறுதியில் CNN+ ஐ அறிமுகப்படுத்தியது.
இந்நிலையில், இந்த மாதத்துடன் சிஎன்என் + சேவை முடிவுக்கு வரவுள்ளது. அதன் தலைவரும் தனது பொறுப்பை ராஜிநாமா செய்தார்.
சந்தாதாரர்களுக்கு பணம் திரும்ப அளிக்கப்படும் என்று வார்னர் பிரதர்ஸ் தெரிவித்துள்ளது.
பல நூறு பேர் வேலை இழக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“