பிரபல சமூக வலைதளமான டுவிட்டரின் எதிர்காலம் நிச்சயமற்றது என்று அதன் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் ஆதங்கம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
டுவிட்டர் ஊடக நிறுவனத்தின் எதிர்காலம் நிச்சயமற்றது. டுவிட்டர் கைமாறும் நிலையில், அது எந்த திசையில் செல்லும் என்று எங்களுக்குத் தெரியாது என்று அவர் தெரிவித்தார்.
உலகின் மிகப் பெரிய பணக்காரர்களின் ஒருவரான எலான் மஸ்க், சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தின் 9.1 சதவீத பங்குகளை வாங்கினார்.
அதைத் தொடர்ந்து டுவிட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் அவர் 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார் எலான் மஸ்க்.
ரஷ்ய உளவுத் துறை குறித்து தகவல் தெரிவித்தால் 1 கோடி டாலர்
ரஷ்ய உளவுத்துறை அதிகாரிகள் குறித்த தகவல்களுக்கு 1 கோடி அமெரிக்க டாலர்கள் வெகுமதி வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கு எதிராக தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடும் ரஷ்ய இராணுவ உளவுத்துறை அதிகாரிகளை அடையாளம் காட்டுவது அல்லது இருப்பிடம் குறித்த தகவல்களுக்கு 1 கோடி அமெரிக்க டாலர்கள் வெகுமதி வழங்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது.
வடகொரியாவின் அணு ஆயுத திறன் வலுப்படுத்தப்படும்-வடகொரியா தலைவர்
வடகொரியாவின் அணு ஆயுதத் திறன் வலுப்படுத்தப்படும் என்று கிம் ஜாங் அன் சூளுரைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “நமது நாட்டின் அணு ஆயுத திறன்களை அதிகபட்ச வேகத்தில் வலுப்படுத்துவதையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்து செயல்படுத்துவோம்.
நமது அணுசக்தி படைகளின் அடிப்படை நோக்கம் போரைத் தடுப்பதுதான். ஆனால் நமது நிலத்தில் விரும்பத்தகாத சூழல் ஏற்பட்டால், நமது அணுசக்திப் படைகளை போரைத் தடுக்கும் ஒற்றை பணியோடு நிறுத்திவிட முடியாது. எனவே நம்முடைய அணு ஆயுதங்கள் எந்த நேரத்திலும் பயன்படுத்த தயாராக இருக்க வேண்டும்” என கூறினார்.
பெய்ஜிங்கில் அதிகரித்து வரும் கொரோனா
கடந்த சில தினங்களாக சீனத் தலைநகர் பெய்ஜிங்கிலும் தொற்று பரவல் வேகமெடுத்து வருகிறது. இதனால் ஷாங்காய் நகரை போல பெய்ஜிங்கிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என அச்சம் நிலவுகிறது.
உக்ரைன் முதல் இலங்கை விவகாரம் வரை.. முக்கிய உலக நிகழ்வுகள்
இந்த நிலையில் பெய்ஜிங்கில் நேற்று புதிதாக 21 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து பெய்ஜிங்கில் உள்ள ஒரு பகுதி கொரோனாவுக்கான அதிக ஆபத்துள்ள பகுதியாகவும், மற்ற 7 பகுதிகள் நடுத்தர ஆபத்து பகுதிகளாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil