ஐ.நா. பொதுச் செயலர் கீவ் நகருக்கு வந்தபோது ரஷிய படைகள் ராக்கெட் தாக்குதலை நடத்தியதில் 10 பேர் காயமடைந்தனர்.
உக்ரைன் மீது ரஷியா 2 மாதங்களுக்கும் மேலாக தாக்குதலை தொடுத்து போரில் ஈடுபட்டு வருகிறது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் முன்னெச்சரிக்கையாக அண்டை நாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர்.
மாணவிகள் ஹிஜாப் அணியாததால் பள்ளி மூடல்
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை பிடித்ததை தொடர்ந்து பெண்கள் கல்வி பயிலும் விவகாரத்தில் பல்வேறு கெடுபிடிகளை விதித்து வருகின்றனர்.
பள்ளிகளில் மாணவிகளுக்கு கடுமையான உடை கட்டுப்பாடு இருந்து வருகிறது.
இந்நிலையில் பள்ளி ஒன்றில் ஹிஜாப் அணிந்து வந்தபோதிலும் முகத்தை மூடாமல் மாணவிகள் வந்ததால் அந்தப் பள்ளியை தலீபான்கள் மூடியுள்ளனர்.
இலங்கையில் இடைக்கால அரசு அமைக்க கோத்தபய ராஜபக்சே முடிவு
இலங்கையில் அனைத்துக்கட்சிகளும் பங்கேற்கும் இடைக்கால அரசு அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக இன்று ஆலோசனை கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வருகின்றன.
ஆனால் ராஜினாமா செய்ய வலியுறுத்தும், போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்து வரும் அதிபர் கோத்தபய மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவரும் ஆட்சியில் தொடர்ந்து நீடித்து வருகின்றனர்.
ரஷ்யாவிடம் இருந்து அதிக எரிபொருளை கொள்முதல் செய்த நாடு
உக்ரைன் போர் காலத்தில் ரஷ்யாவிடம் இருந்து ஜெர்மனி அதிக எரிபொருளை கொள்முதல் செய்துள்ளது.
இந்த காலகட்டத்தில் ரஷ்யா புதைபடிம எரிபொருள் விற்பனை மூலம், 66.5 பில்லியன் டாலர் ஈட்டியுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: சிங்கப்பூரில் தமிழக வம்சாவளி மனநல மாற்றுத்திறனாளிக்கு மரண தண்டனை
இதில் அதிக அளவாக ஜெர்மனி மட்டும் 2 மாதங்களில் ரஷ்யாவிடம் இருந்து 9.1 பில்லியன் யூரோ அளவுக்கு எரிபொருள் கொள்முதல் செய்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“