இனப் படுகொலையில் இருந்து தப்பியவர் மறைவு
ஜெர்மனி ஹிட்லர் தலைமையிலான நாஜி படைகள் நிகழ்த்திய இனப் படுகொலையில் இருந்து தப்பித்து உயிர்வாழ்ந்து வந்த 101 வயதான லியோன் ஸ்சார்ஸ்பம் உயிரிழந்தார்.
ஜெர்மனியின் பெர்லின் அருகிலே உள்ள பாட்ஸ்டாம் பகுதியில் வசித்து வந்த அவர், நேற்று உயிரிழந்தார்.
அவர் உயிரிழந்ததற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
போலந்து ஜெர்மனியின் வசம் இருந்தபோது அவுஷ்விட்ஸ் நகருக்கு அருகில் மிக் பெரிய வதை முகாம் இருந்தது. லட்சக்கணக்கானோர் இந்த வதை முகாமில் கொல்லப்பட்டனர்.
துபாயில் சர்வதேச மனிதாபிமான உதவி கண்காட்சி
துபாய் நகரில் உள்ள உலக வர்த்தக மையத்தில் சர்வதேச மனிதாபிமான உதவி மற்றும் மேம்பாடு தொடர்பான கண்காட்சி, கருத்தரங்கு நேற்று தொடங்கியது.
இதில் ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல், நைஜீரியா உள்ளிட்ட 80 நாடுகளைச் சேர்ந்த சர்வதேச மனிதாபிமான உதவி அமைப்புகள், நிறுவனங்கள் உள்ளிட்டவை பங்கேற்றுள்ளன. 18-வது ஆண்டாக நடைபெறும் இந்த கண்காட்சியில் 600-க்கும் மேற்பட்ட சர்வதேச அளவிலான தன்னார்வ தொண்டு அமைப்புகள் கலந்து கொண்டு இருக்கின்றன.
இந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கை துபாய் அரசின் தகவல் தொடர்புத்துறை பொது இயக்குனர் ஷேக் ஹசர் பின் மக்தூம் அல் மக்தூம் தொடங்கி வைத்தார்.
புதிதாக திறக்கப்பட்ட துபாய் மியூசியத்தில் என்ன இருக்கிறது? அது நிஜமாகவே மியூசியம் தானா?
புதினுக்கு சவால் விடுத்த பிரபல தொழிலதிபர்!
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் எலோன் மஸ்க், நேற்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு சவால் ஒன்றை விடுத்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா கொடூரமான தாக்குதலை நடத்தி வருவதைத் தொடர்ந்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ரஷிய மொழியில், "இதன் மூலம் நான் விளாடிமிர் புதினுக்கு ஒரு ஒற்றைப் போருக்கு சவால் விடுகிறேன். இந்த சண்டையை ஏற்றுக்கொள்கிறாரா" என்று கேட்டுள்ளார்.
இந்த டுவீட் குறித்து ரஷிய தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை.
முகக் கவசம் அணிவது கட்டாயம் இல்லை என அறிவித்த நாடு
பள்ளிகள், அலுவலகங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயம் இல்லை என பிரான்ஸ் அறிவித்துள்ளது.
பிரான்சில் பெரும்பாலான கொரோனா கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ளன. அதன்படி, பள்ளிகள், அலுவலகங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயம் இல்லை.
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் உணவகங்கள், விளையாட்டு மைதானங்களுக்குச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வருவதையும், மருத்துவமனைகளில் நிலைமை மேம்பட்டிருப்பதையும் அடுத்து நிகழ் மாத தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட இந்த அறிவிப்புகள் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil“