Advertisment

பிரதமர் மோடிக்கு பாக்., பெண் நன்றி.. ரஷ்யா குறித்து அமெரிக்கா எச்சரிக்கை.. மேலும் செய்திகள்

இந்த போரில் ரஷ்ய தரப்பில் பாதுகாப்பு படையினர், உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

author-image
WebDesk
New Update
பிரதமர் மோடிக்கு பாக்., பெண் நன்றி.. ரஷ்யா குறித்து அமெரிக்கா எச்சரிக்கை.. மேலும் செய்திகள்

உக்ரைனில் இருந்து தன்னை மீட்ட இந்திய தூதரகத்திற்கும் இந்திய பிரதமர் மோடிக்கும் பாகிஸ்தானை சேர்ந்த பெண் நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisment

உக்ரைன் மீது ரஷியா இன்று 14-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. 

இதனால் உக்ரைன் படைகளுக்கும், ரஷியாவின் படைகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த போரில் ரஷிய தரப்பில் பாதுகாப்பு படையினர், உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். 

இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தும் வருகின்றன. இந்த முயற்சிகளின் பலனாக உக்ரைனின் சில பகுதிகளில் தற்காலிகமாக சண்டையை நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. 

இதற்கிடையில், போர் நடைபெற்று வரும் சூழ்நிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மத்திய அரசு மீட்டு வருகிறது. ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் இந்த மீட்பு நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த மீட்பு நடவடிக்கை மூலம் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், உக்ரைனில் சிக்கியிருந்த பாகிஸ்தானை சேர்ந்த ஆஸ்மா ஷபிக்யூ என்ற பெண்ணை இந்தியா மீட்டுள்ளது. தன்னை மீட்டதற்கு உக்ரைன் தலைநகர் கீவ்-வில் உள்ள இந்திய தூதரகத்திற்கும் இந்திய பிரதமர் மோடிக்கும் பாகிஸ்தான் பெண் ஆஸ்மா நன்றி தெரிவித்துள்ளார்.

பெண்கள் அதிகமாக அரசியலில் ஈடுபட வேண்டும்: ஹிலாரி கிளிண்டன்

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு அபுதாபியில் நடைபெற்ற பெண்கள் உச்சி மாநாட்டில் ஹிலாரி கிளிண்டனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அவருக்கு வழங்கப்பட்டது.

அபுதாபியில் நடைபெற்ற மகளிர் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அமெரிக்க முன்னாள் வெளியுறவு செயலாளர் ஹிலாரி கிளிண்டன் ‘மகளிர் முன்னேற்றத்திற்கு அவர்கள் அதிகமாக அரசியலில் ஈடுபட வேண்டும்’ என கூறியுள்ளார்.

61 உக்ரேனிய மருத்துவமனைகள் ரஷ்ய ராணுவத்தால் அழிப்பு

உக்ரைன் மீது ரஷ்யா இன்று 14-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. 

இதனால் உக்ரைன் படைகளுக்கும், ரஷ்யாவின் படைகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த போரில் ரஷ்ய தரப்பில் பாதுகாப்பு படையினர், உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், ரஷ்ய தாக்குதலால் இதுவரை 61 மருத்துவமனைகள் சேதமடைந்துள்ளன என உக்ரைனின் சுகாதார அமைச்சர் லியாஷ்கோ கூறியுள்ளார்.

உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தலாம்:

அமெரிக்க உளவுத் துறை எச்சரிக்கை

உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிடலாம் என அமெரிக்க உளவுத் துறை அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா இன்று 14-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள் தலைநகர் கீவ் நகரை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. 

இதனால் உக்ரைன் படைகளுக்கும், ரஷ்யாவின் படைகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த போரில் ரஷ்ய தரப்பில் பாதுகாப்பு படையினர், உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். 

உயரும் கச்சா எண்ணெய் விலை; அடுத்து என்ன?

இந்நிலையில், உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்த வாய்ப்புள்ளதாக அமெரிக்க உளவுத் துறை எச்சரித்துள்ளது.

கொரோனா: குணமடைந்தோர் எண்ணிக்கை 38.38 கோடியாக உயர்வு

கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 கோடியே 94 லட்சத்து 90 ஆயிரத்து 049 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 5 கோடியே 96 லட்சத்து 53 ஆயிரத்து 630 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 60 லட்சத்து 34 ஆயிரத்து 436 பேர் உயிரிழந்துள்ளனர். அதே சமயம் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 38 கோடியே 38 லட்சத்து 01 ஆயிரத்து 983 பேர் குணமடைந்துள்ளனர். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

World News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment