Advertisment

உலகின் மிகப்பெரிய விமானத்தை அழித்த ரஷ்யா.. கொரோனா அப்டேட்.. மேலும் செய்திகள்

முகநூல் மற்றும் யூ-டியூப்பை தொடர்ந்து கூகுள் நிறுவனமும் ரஷ்யாவை சேர்ந்த ஊடகங்களின் விளம்பர வருமானங்களுக்குத் தடை விதித்துள்ளது.

author-image
WebDesk
New Update
உலகின் மிகப்பெரிய விமானத்தை அழித்த ரஷ்யா.. கொரோனா அப்டேட்.. மேலும் செய்திகள்

உக்ரைனுக்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய விமானம் “மிரியா”   ரஷ்ய படையெடுப்பாளர்களால் அழிக்கப்பட்டதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

Advertisment

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. நள்ளிரவில் தலைநகர் கீவ்வில் பல இடங்களில் குண்டுகள் வெடித்ததாக தகவல் வெளியாகின. கீவ் நகரை பிடிக்க ரஷிய படையினர் தீவிரமாக உள்ளனர். 

உக்ரைன்- ரஷிய எல்லை, பெலாரஸ், கிரீமியா தீபகற்பம், கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் பகுதி ஆகியவற்றில் இருந்து ரஷிய ராணுவம் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் உக்ரைனின் முக்கிய நகரங்களில் கடும் சேதம் ஏற்பட்டது.

இந்நிலையில், கொரானா தொற்றின் நெருக்கடியான காலங்களில் உலகம் முழுவதும் உயிர்காக்கும் தடுப்பூசி மற்றும் மருந்துகளை எடுத்து சென்ற நம்பிக்கையின் சின்னமாக பார்க்கப்பட்ட உக்ரைனுக்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய விமானத்தை ரஷ்ய படையினர் அழித்திருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து உக்ரைனின் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா டுவிட்டரில், “ரஷியா நமது ‘மிரியா’வை அழித்திருக்கலாம். ஆனால் வலுவான, சுதந்திரமான மற்றும் ஜனநாயக ஐரோப்பிய அரசு என்ற நமது கனவை அவர்களால் ஒருபோதும் அழிக்க முடியாது. நாம் வெல்வோம்” என குறிப்பிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் 43 கோடியை தாண்டியது

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 43 கோடியைத் தாண்டிவிட்டது.

சீனாவில் 2019ஆம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா பாதிப்பு உலக நாடுகளில் பரவியது.

அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட வல்லரசுகளும் கொரோனா தாக்குதலில் இருந்து தப்பவில்லை. அந்நாடுகளில் தினசரி லட்சம் எண்ணிக்கையில் பாதிப்பு உறுதியாகி வருகிறது.

இந்நிலையில், டெல்டா, டெல்டா பிளஸ் மற்றும் ஒமைக்ரான் என பல்வேறு திரிபுகளும் பாதிப்புகளை அதிகரித்து வருகின்றன. 

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 43.57 கோடியை தாண்டியுள்ளது.

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 10-ஆக உயர்வு

இந்தோனேசியாவில் வடக்கு சுமத்ரா தீவின் புகிதிங்கி பகுதியில் கடந்த வெள்ளி கிழமை காலை 7 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டரில் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி இருந்தது.

2 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதன் மூலம் பலி எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது.

அவசர நிவாரண உதவிகள் நிலநடுக்க பாதிப்பு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய ஊடகங்களின் விளம்பர வருமானத்துக்கு தடை

முகநூல் மற்றும் யூ-டியூப்பை தொடர்ந்து கூகுள் நிறுவனமும் ரஷ்யாவை சேர்ந்த ஊடகங்களின் விளம்பர வருமானங்களுக்குத் தடை விதித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், ரஷ்யாவின் அரசு மற்றும் தனியார் ஊடகங்கள் முகநூலில் விளம்பரங்கள் மூலம் வருவாய் ஈட்டுவதற்கு அந்நிறுவனம் தற்காலிக தடை விதித்தது.

அதை தொடர்ந்து, யூ-டியூப் நிறுவனமும் ரஷ்ய அரசு மற்றும் தனியார் ஊடகங்கள் தங்கள் வீடியோக்களில் விளம்பரங்கள் மூலம் பெரும் வருமானத்துக்கு தடை விதித்தது.

அதாவது, கூகுள் இணைய தளங்களிலும், கூகுளுக்கு சொந்தமான செயலிகள் உள்ளிட்டவற்றிலும் ரஷிய நாட்டின் அரசு மற்றும் தனியார் ஊடகங்கள் விளம்பரங்கள் மூலம் பெரும் வருமானத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கூகுள் நிறுவனத்தின் தலைமை அமைப்பான ஆல்பாபெட் அறிவித்துள்ளது.

4,000க்கும் அதிகமான ரஷ்ய வீரர்கள் பலி: உக்ரைன் ராணுவம்

உக்ரைன் - ரஷியா இடையே போர் நடந்து வருவதால், இருநாட்டு ராணுவத்திலும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

இந்நிலையில், உக்ரைனில் உயிரிழந்த ரஷ்ய ராணுவ வீரர்களின் உடல்களை அந்நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு, சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம், ஐ.நா.,வுக்கான உக்ரைன் துாதர் செர்ஜி கிஸ்லிட்ஸ்யா அறிவுறுத்தி உள்ளார்.

அமைதி பேச்சுவார்த்தைக்கு சம்மதம்… ரஷ்யா- உக்ரைன் லேட்டஸ்ட் 10 நிகழ்வுகள்

போர் தொடங்கியதில் இருந்து இதுவரை உக்ரைன் நடத்திய பதில் தாக்குதல்களில் 4,000-க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது. 

ரஷ்ய ராணுவத்தின் 146 பீரங்கிகள், 27 போர் விமானங்கள், 26 ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் கூறி உள்ளது.

இதுதவிர ரஷ்ய வீரர்கள் சிலரை போர்க் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாகவும் உக்ரைன் ராணுவம் கூறி உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

World News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment