Advertisment

உக்ரைனுக்கு ஐ.நா. நிதி உதவி.. இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்.. மேலும் உலக நிகழ்வுகள்

உக்ரைனில் போர் பதற்றம் நிறைந்த சூழலில் உடனடி நிதி உதவி அளிக்க தயார் என உலக வங்கி அறிவித்து உள்ளது.

author-image
WebDesk
New Update
உக்ரைனுக்கு ஐ.நா. நிதி உதவி.. இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்.. மேலும் உலக நிகழ்வுகள்

உக்ரைன் நாட்டின் மீது நேற்று ரஷியா போர் தொடுத்தது. சரமாரி குண்டு வீச்சு, ஏவுகணை தாக்குதல் காரணமாக உக்ரைன் நிலைகுலைந்து போய் உள்ளது.

Advertisment

இதுவரை 137 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் ​மீதான ரஷ்யாவின் போர் 2-வது நாளாக தொடர்கிறது.

மேலும் 18 - 6- வயது ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற உக்ரைன் அரசு தடை விதித்துள்ளது.

கீவ் நகரில் உள்ள மக்களுக்கு 10,000 தானியங்க துப்பாக்கிகள் விநியோகித்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனுக்கு உடனடி நிதி உதவி: உலக வங்கி அறிவிப்பு

உக்ரைனில் போர் பதற்றம் நிறைந்த சூழலில் உடனடி நிதி உதவி அளிக்க தயார் என உலக வங்கி அறிவித்து உள்ளது.

ரஷியாவுடனான முதல் நாள் போரில் இதுவரை 137 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக காணொளியின் மூலமாக உரையாற்றிய அவர், ரஷிய படைகளின் பெரிய அளவிலான தாக்குதலுக்கு உள்ளான உக்ரைனியர்கள் 137 பேர் உயிரிழந்தனர். மேலும் 316 பேர் படுகாயமடைந்து உள்ளனர்.  அதில் எங்கள் இராணுவம் மற்றும் பொதுமக்கள் அடங்குவர் என்று கூறினார்.

இந்நிலையில், உலக வங்கி நிதி உதவி அளிக்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டு உள்ள அறிவிப்பில், உக்ரைனுக்கு உடனடியாக உதவிகள் வழங்க தயாராக இருக்கிறோம்.  அதிவேக நிதி பகிர்வு உள்பட உதவிகளை வழங்குவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி வருகிறோம்.

இதுதவிர, உலக வங்கி குழுவானது உதவிகளை உடனடியாக வழங்குவதற்கு, எங்களுடைய அனைத்து நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவு உபகரணங்களை பயன்படுத்தி கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ரஷியாவின் படையெடுப்பைத் தொடர்ந்து உக்ரைனில் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ள உடனடியாக 20 மில்லியன் டாலர்களை ஒதுக்குவதாக ஐ.நா. சபை அறிவித்துள்ளது.

தனித்துவிடப்பட்டுள்ளோம்: ரஷிய அதிபர் வேதனை

உக்ரைனில் ரஷியா தாக்குதலில் 137 பேர் பலியாகி உள்ளதாகவும் ரஷியாவுக்கு எதிராக தனிந்தனியாக போராடி வருகிறோம் என்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். 

மேலும்  18 - 60 வயது ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற உக்ரைன் அரசு தடை விதித்துள்ளது.

இதனிடையே உக்ரைனில் நுழைந்து தாக்குதல் நடத்திய ரஷியா மீது பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா. பொருளாதார தடையை விதித்ததற்காக ரஷியா சைபர் தாக்குல் நடத்தினால் எதிர்கொள்ள தயார் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவு பகுதியில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட  விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.  சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

உக்ரைன் விவகாரம்: இம்ரான் கானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

உக்ரைனுக்கு எதிரான ரஷிய நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை அமெரிக்கா எச்சரித்துள்ளது.

ரஷியா- உக்ரைன் போர்: காரணம் என்ன? முழுப் பின்னணி

ரஷியா போரைத் தவிர்க்குமா என்ற தவிப்பு உச்சத்தில் இருந்தபோது, நேற்று முன்தினம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் 2 நாள் அரசு முறைப் பயணமாக ரஷியாவுக்கு புறப்பட்டுச் சென்றார்.

நேற்று காலை அவர் ரஷிய தலைநகர் மாஸ்கோவுக்கு சென்றார். அங்கு அவரை ரஷிய உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.

23 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் பிரதமர் ஒருவர், ரஷியா சென்றிருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

முன்னதாக வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவரிடம் இம்ரான்கான் மாஸ்கோ சென்றிருப்பது பற்றியும், அவர் ரஷிய அதிபர் விளாமிர் புதினைச் சந்தித்து பேசுவது குறித்தும் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நெட் பிரைஸ் பதில் அளித்து கூறியதாவது:-

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் ரஷிய பயணம் குறித்து அறிந்துள்ளோம். உக்ரைன் மீதான ரஷியாவின் புதுப்பிக்கப்பட்ட படையெடுப்பு தொடர்பான எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் பாகிஸ்தானுக்கு தெரியப்படுத்தி உள்ளோம்.

மேலும் போர் தொடர்பான தூதரக ரீதியிலான எங்கள் முயற்சிகள் குறித்தும் நாங்கள் அவர்களுக்கு விளக்கி இருக்கிறோம். உக்ரைன் மீதான ரஷியாவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்பது பொறுப்பான ஒவ்வொரு நாட்டின் கடமை ஆகும். உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை பாகிஸ்தானுக்கு தெரிவித்தாகி விட்டது என்று அவர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

World News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment