தலிபான்களுக்கு எதிராக புதிய போர்-முன்னாள் ராணுவ தளபதி
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக புதிய போர் தொடங்கப்படும் என்று முன்னாள் ராணுவ தளபதி எச்சரித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக உள்நாட்டு போரில் ஈடுபட்டு வந்த தலிபான் பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆட்சியைப் பிடித்தனர்.
அதை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேறி பல நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.
லண்டனில் தஞ்சமடைந்துள்ள ஆப்கானிஸ்தானின் முன்னாள் ராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சாமி சதாத், தலிபான்களுக்கு எதிராக புதிய போர் தொடங்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தென் கொரியாவில் கட்டாய முகக் கவசம் ரத்து
தென்கொரியாவில் கட்டாய முகக் கவசத்தை ரத்து செய்யது அந்நாட்டு அரசு. கொரோனா காரணமாக கட்டாயம் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், அந்த உத்தரவை தற்போது அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளது.
கொரோனா-குணமடைந்தோர் எண்ணிக்கை 46.66 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 51.27 கோடியாக உயர்ந்து உள்ளது. அதேநேரம், குணமடைந்தோர் எண்ணிக்கை 46.66 கோடியாக உயர்ந்துள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 கோடியே 27 லட்சத்து 36 ஆயிரத்து 640 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 கோடியே 98 லட்சத்து 71 ஆயிரத்து 839 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெஸ்லா நிறுவனத்தின் 44 லட்சம் பங்குகளை விற்ற எலான் மஸ்க்
டெஸ்லா நிறுவனத்தின் 44 லட்சம் பங்குகளை எலான் மஸ்க் விற்பனை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சகோதரர் மகிந்த ராஜபக்சே-வை பிரதமர் பதவியிலிருந்து நீக்க இலங்கை அதிபர் ஒப்புதல்
உலகின் பெரும் பணக்காரரான அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், டுவிட்டர் சமூக ஊடக நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கி உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் அவர் தனது மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவின் 44 லட்சம் பங்குகளை விற்பனை செய்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“