விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே தனது நீண்டகால காதலியான ஸ்டெல்லா மோரிஸை தென்கிழக்கு லண்டனில் உள்ள உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் நேற்று திருமணம் செய்துகொண்டார்.
பெல்மார்ஷ் சிறைச்சாலையில் கைதிகளை பார்வையாளர்கள் பார்வையிடும் நேரத்தில் திருமணம் நடைபெற்றது.
ஜூலியன் அசாஞ்சே தனது விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் மூலம் அரசாங்க ரகசிங்ககளை ஹேக் செய்தது தொடர்பான வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் உள்ளார்.
50 வயதான ஜூலியன் அசாஞ்சே 2019 முதல் பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதற்கு முன்பு லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் ஏழு ஆண்டுகளாக தஞ்சமடைந்திருந்தார். அப்போது மோரிஸை காதலித்தார். மோரிஸ் இவரது வழக்கறிஞராகவும் இருக்கிறார்.
திருமணத்திற்கு பின் ஸ்டெல்லா மோரிஸ் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடும் வீடியோ ஒன்றை விக்கிலீக்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
பெல்ஜியத்தில் இன்று நேட்டோ அவசர உச்சி மாநாடு
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் ஒரு மாதத்தை எட்டிய நிலையில், நேட்டோ அமைப்பின் அவசர உச்சி மாநாடு பெல்ஜியம் தலைநகரான பிரஸ்ஸல்ஸ் நகரில் இன்று நடக்கிறது.
இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்பட 30 உறுப்பு நாடுகளின் தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.
ஜி-7 தலைவர்கள் கூட்டத்திலும் ஜோ பைடன் பங்கேற்று பேசுகிறார். மேலும், அவர் ஐரோப்பிய கவுன்சில் அமர்விலும் கலந்துகொண்டு பேசுகிறார்.
இந்த நிகழ்ச்சிகளின்போது உக்ரைன் மீதான படையெடுப்பால் ரஷியா மீது பொருளாதார தடைகளை விதிப்பதுடன், தற்போதைய தடைகளை மேலும் இறுக்குவது பற்றியும் தனது கூட்டாளிகளுடன் ஜோ பைடன் விவாதிக்க உள்ளார்.
ஹிலாரி கிளிண்டனுக்கு கொரோனா
அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹிலாரி கிளிண்டனுக்கு வயது 74. இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு நேற்று முன்தினம் உறுதியாகி உள்ளது. அவருக்கு லேசான அறிகுறிகள் உள்ளன. ஆனால் நலமாக உள்ளார். இதை அவரே தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் அவரது கணவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பில் கிளிண்டனுக்கு தொற்று பாதிப்பு இல்லை.
இந்த மாத தொடக்கத்தில் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது நினைவுகூரத்தக்கது.
உக்ரைனில் மக்கள் வெளியேற உதவிய பாலம் தகர்ப்பு
உக்ரைன் நாட்டில் செர்னிஹிவ் நகரை ரஷிய படைகள் சுற்றி வளைத்துள்ளன. இந்த நகரில் தண்ணீர் கிடையாது. மின்சாரம் கிடையாது. இங்கு பொதுமக்கள் வெளியேற உதவிய முக்கிய பாலத்தை ரஷ்ய படைகள் குண்டுவீசி அழித்துள்ளன.
தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ராஜபட்சே ஆலோசனை நடத்த முடிவு: அமெரிக்கா வரவேற்பு
இந்தப் பாலம்தான் மக்களுக்கு மனித நேய உதவிகள் சென்றடையவும் உதவியது. இந்தப் பாலம் அங்குள்ள டெஸ்னா ஆற்றைக்கடந்து, செர்னிஹிவ் நகரை தலைநகர் கீவ்வுடன் இணைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “