குணமடைந்தோர் எண்ணிக்கை 46.30 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 கோடியே 99 லட்சத்து 27 ஆயிரத்து 303 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4 கோடியே 6 லட்சத்து 53 ஆயிரத்து 969 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 46 கோடியே 30 லட்சத்து 28 ஆயிரத்து 264 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 62 லட்சத்து 45 ஆயிரத்து 70 பேர் உயிரிழந்துள்ளனர்.
உக்ரைனுக்கு எங்கள் ஆதரவு தொடரும்: அமெரிக்க அமைச்சர்கள்
ரஷ்யாவின் தாக்குதலுக்கு மத்தியில் உக்ரைன் அதிபரை, அமெரிக்க அமைச்சர்கள் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
அமெரிக்க ராணுவ அமைச்சர் லாயிடு ஆஸ்டின், வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் ஆகியோர் உக்ரைனுக்கு சென்று அந்நாட்டு அதிபர் ஜென்ஸ்கியை சந்தித்தனர்.
இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் உக்ரைன் தலைநகர் கீவில், அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினர்.
மேலும் ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இலங்கை அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்?
இலங்கை அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்க வழி தெரியாத ராஜபக்சே சகோதரர்கள் அரசில் இருந்து விலக வேண்டும் என நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.
தலைநகர் கொழும்பில் அதிபரின் செயலகத்துக்கு எதிரே தன்னெழுச்சியாக நடந்து வரும் போராட்டம் நேற்று 17-வது நாளை எட்டியது.
மீண்டும் இவர்தான் பிரான்ஸ் அதிபர்.. இலங்கை பிரதமர் வீடு சுற்றிவளைப்பு.. மேலும் செய்திகள்
கொரோனா தடுப்பூசி போடாதவர்களால் மற்றவர்களுக்கு பரவும் அபாயம்
கொரோனா தடுப்பூசி போடாதவர்களால், கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு தொற்று அபாயம் அதிகம் இருப்பதாக கனடா ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கனடாவில் உள்ள டொரண்டோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், கொரோனா தடுப்பூசி போட்டவர்களும், போடாதவர்களும் இணைந்து செயல்பட்டால், அதனால் ஏற்படும் விளைவை கண்டறிய ஒரு எளிய மாதிரி ஆய்வில் ஈடுபட்டனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil