முக்கியமான உலகச் செய்திகள் சிலவற்றை இப்போது பார்ப்போம்.
கொரோனா வைரஸின் புதிய ஓமிக்ரான் மாறுபாடு; WHO கவலை
புதிய கொரோனா வைரஸ் மாறுபாட்டின் கண்டுபிடிப்பு உலகின் பெரும்பகுதிகளில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் சில நாடுகள் விமானப் பயணத்தை நிறுத்தியுள்ளன. பங்குச்சந்தைகள் கடுமையாக வீழ்ச்சியடைந்தன. விஞ்ஞானிகள் வைரஸின் சரியான அபாயங்களை கண்டறிய அவசரக் கூட்டங்களை நடத்தினர், இன்னும் பெரிய கண்டுபிடிப்புகள் அறியப்படவில்லை.
இதன் விளைவாக, அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல நாடுகள் தென்னாப்பிரிக்காவில் இருந்து வருபவர்களுக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. ஏனெனில் தென்னாப்பிரிக்காவில் தான் இந்த வைரஸ் மாறுபாட்டின் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது மற்றும் வேகமாக பரவி வருகிறது.
காபூலில் துருக்கியரால் நடத்தப்படும் பள்ளிகளின் சேர்க்கைக்கான நுழைவு தேர்வை எழுதிய ஆப்கான் பெண்கள்
13 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகளை வகுப்பறைக்கு செல்ல அனுமதிப்பதில் தாலிபான்கள் தாமதம் செய்து வருகிற நிலையிலும், ஆப்கானிஸ்தானில் மிகவும் மதிக்கப்படும், காபூலில் உள்ள துருக்கிய அறக்கட்டளையால் நடத்தப்படும், சில பள்ளிகளுக்கான நுழைவுத் தேர்வில் வெள்ளிக்கிழமை நூற்றுக்கணக்கான ஆப்கானிஸ்தான் பெண்கள் கலந்து கொண்டனர்.
சுமார் 3,500 மாணவர்கள் ஆப்கானிஸ்தான்-துருக்கி பள்ளிகளுக்கான நுழைவுத் தேர்வுகளில் கலந்துக் கொண்டனர், இதில் கிட்டத்தட்ட 40% பெண்கள் என்று பள்ளி அதிகாரி ரெசா பர்சா கூறினார். ஆகஸ்ட் மாதம் தாலிபான் ஆட்சியைக் கைப்பற்றியபோது விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து, 7 ஆம் வகுப்புக்கு மேல் உள்ள (சுமார் 13 வயதுடைய) சிறுமிகளை பள்ளிக்கு செல்ல அனுமதிப்பதில் தலிபான் அரசாங்கம் தாமதம் செய்த போதிலும் இந்த மாற்றம் நடைபெற்றுள்ளது.
கலிதா ஜியா கவலைக்கிடம்; கடும் நெருக்கடியில் வங்கதேசத்தின் எதிர்க்கட்சியான பிஎன்பி
பங்களாதேஷின் முதல் பெண் பிரதமரும் தற்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவின் தலைவருமான கலிதா ஜியா இந்த மாதம் டாக்கா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். முன்னாள் பிரதமரும், பங்களாதேஷ் தேசியவாத கட்சியின் (BNP) தலைவருமான 76 வயதான கலிதா ஜியா, நாள்பட்ட மற்றும் உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார்.
"அவருக்கு நாள்பட்ட கல்லீரல் நோய் உள்ளது, பங்களாதேஷில் சிகிச்சையளிக்க முடியாத பிற பிரச்சினைகளும் உள்ளன. ஜெர்மனி போன்ற வளர்ந்த நாட்டில் அவருக்கு அவசரமாக சிகிச்சை தேவைப்படுகிறது,” என்று கலிதா ஜியாவின் தனிப்பட்ட மருத்துவர் AZM ஜாஹித் ஹொசைன் DW இடம் கூறினார். இருப்பினும், 2018 ஆம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பிறகு ஜியா வங்கதேசத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை.
புலம்பெயர்ந்தோர் மீதான பிரிட்டனின் புதிய திட்டம்; விமர்சிக்கும் பிரான்ஸ்
ஆங்கிலக் கால்வாயின் குறுக்கே ஆபத்தான வழியில் உள்நுழைவோர் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான வார்த்தைப் போர் மேலும் அதிகரித்ததால், தங்கள் கரைகளுக்கு இடையில் குடியேறுபவர்களின் அதிகரிப்பைக் கையாள்வதற்கான பிரிட்டனின் சமீபத்திய திட்டங்களுக்கு பிரான்ஸ் வெள்ளிக்கிழமை கோபத்துடன் பதிலளித்தது.
பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கு எழுதிய பகிரங்கக் கடிதத்தில், பிரிட்டிஷ் பிரதம மந்திரி போரிஸ் ஜான்சன், புதன் கிழமையன்று படகு மூழ்கியதில் 27 பேர் இறந்ததைத் தொடர்ந்து, நெருக்கடியை இரு நாடுகளும் எவ்வாறு சமாளிக்கலாம் என்பது பற்றிய தொடர் திட்டங்களை முன்வைத்தார்.
பெருவில் 800 ஆண்டுகள் பழமையான மம்மியை கண்டுபிடித்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்
பெருவின் மத்திய கடற்கரையில் குறைந்தபட்சம் 800 ஆண்டுகள் பழமையான மம்மியை நிபுணர்கள் குழு கண்டுபிடித்துள்ளது, என்று அகழ்வாராய்ச்சியில் பங்கேற்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களில் ஒருவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். மம்மியானது தென் அமெரிக்க நாட்டின் கடற்கரைக்கும் மலைகளுக்கும் இடையில் வளர்ந்த கலாச்சாரத்தைச் சேர்ந்த ஒருவருடையது. பாலினம் அடையாளம் காணப்படாத மம்மி, லிமா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக தொல்பொருள் ஆய்வாளர் பீட்டர் வான் டேலன் லூனா தெரிவித்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.