நைஜீரியாவில் படகு கவிழ்ந்ததில் குழந்தைகள் உள்பட 29 பேர் உயிரிழந்தனர்.
நைஜீரியாவில் வடமேற்கே சொகொட்டோ மாகாணத்தில் படகில் பயணம் செய்தபோது திடீரென மரம் மீது படகு மோதியது.
இதில் பயணிகள் பலர் நீரில் மூழ்கினர். இந்த விபத்தை அறிந்து உள்ளூர் நீச்சல் வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும், 26 பேர் உயிரிழந்தனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவில் முக கவசம்: மே 3 வரை நீட்டிப்பு
அமெரிக்காவில் பொது போக்குவரத்து பயன்படுத்தும் மக்கள் முக கவசம் அணிவது வருகிற மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவின் பல நகரங்களில் கொரோனாவின் பிஏ.2 வகையானது அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வகை தொற்று தீவிர பரவல் தன்மை கொண்டபோதிலும், மருத்துவமனையில் சேர்வோரின் எண்ணிக்கையும் ஒருபுறம் குறைந்து வருகிறது.
எனினும், சுகாதார நலனை முன்னிட்டு முக கவசம் அணிதலை பைடன் அரசாங்கம் தொடர்ந்து பல்வேறு காலகட்டங்களில் நீட்டித்து வருகிறது.
இந்த நடவடிக்கையின்படி, அமெரிக்காவில் பொது போக்குவரத்து பயன்படுத்தும் மக்கள் முக கவசம் அணிவது வருகிற மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
ரஷியாவில் இன்போசிஸ் நிறுவனத்தை மூட முடிவு
ரஷ்யாவில் இன்போசிஸ் நிறுவனம் மூட உள்ளதாகவும், வணிக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனம், ரஷியாவில் தனது அலுவலகத்தை மூட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷியா படையெடுத்து போர் நடத்தி வருகிறது.
இந்த சூழ்நிலையில் ரஷ்யாவில் செயல்பட்டு வந்த இன்போசிஸ் நிறுவனம் மூட உள்ளதாகவும், அங்கு அனைத்து வணிக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
எலான் மஸ்க் மீது வழக்கு
டுவிட்டர் பங்குகளை வாங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி பங்குதாரர் ஒருவர் எலான் மஸ்க் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
டுவிட்டர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கினார் உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான மஸ்க்.
இலங்கையில் போராடும் இளைஞர்களுடன் பேச்சுவார்த்தைக்கு முன்வந்த பிரதமர் மஹிந்த ராஜபக்சே
டுவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை தான் வாங்கியதாக கடந்த 4-ந்தேதி எலான் மஸ்க் அறிவித்தார். இதையடுத்து அவர் டுவிட்டர் நிர்வாக குழுவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதை மறுத்துவிட்டார்.
இந்த நிலையில் டுவிட்டர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி டுவிட்டர் நிறுவன பங்குதாரர் ஒருவர் எலான் மஸ்க் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.