மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கை சென்றுள்ளார் . அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்த அவர், இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாகவும், மீனவர்கள் பிரச்சினை குறித்தும் ஆலோசிதார்கள். பின்னர் இரு நாடுகளின் வெளியுறவு துறை அமைச்சர்களும் ஊடகத்தை சந்தித்தனர்.
முதலில் ஊடகத்தை சந்தித்து பேசிய இலங்கை வெளிவுறவு துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன, " இந்தியாவின் அண்டை நாட்டு கொள்கையின் வெளிப்பாடாக இலங்கைக்கு சுகாதாரத்திலும் பொருளாதாரத்திலும் மிகவும் உதவி வருகின்றது.
அதிபர் ராஜபக்சேவின் அரசு இலங்கை மக்களின் நல்வாழ்விற்கும் அவர்களின் முன்னேற்றத்திற்கும் பாடுபடுகின்றது. அதோடு சிங்களர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் என்ற இன பாகுபாடு காட்டாத அரசாகவும் செயல்படுகின்றது" என தெரிவித்தார்
அதை தொடர்ந்து பேசிய இந்திய வெளிவுறவு துறை அமைச்சர் எஸ். சங்கர், "இந்தியா இலங்கை இரு நாடுகளுமே கோவிட்-19 தொற்றால் பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவை சந்தித்து இருக்கின்றன. இந்தியா பரஸ்பர நம்பிக்கையோடும், நலன்களோடும், மற்றும் மரியாதையோடும், இலங்கையுடனா உறவை வலுப்படுத்தும். அதோடு அண்டைநாடாக மட்டுமின்றி நல்ல நட்பு நாடக செயல்படும். இந்தியா இலங்கைக்கான இன நல்லிணக்க ஆதரவை நீண்டகாலமாகவே கொடுத்து வருகின்றது. இலங்கை மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கும், ஒற்றுமையை நிலைப்படுத்துவதற்கும் இந்தியா ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்கும்.
இலங்கையுடன் எரிசக்தி, உள்கட்டமைப்பு மற்றும் இணைய தொடர்புகள் போன்ற திட்டங்களில் இந்தியா இணைந்து செயல்படும். மற்றும் இது போன்ற மற்ற திட்டங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளது. கோவிட் -19 தொற்றில் மீள்வதற்கான மருந்துகளையும், உதவிகளையும் செய்து தருவதோடு சுற்றுலா துறையிலும் நிச்சயம் முதலீடு செய்யும்.
இந்தியா கடல் சார்ந்த பிரச்சனைகளை சமாளிக்கும் திறனை மேம்படுத்துவதற்கு துணை நிற்கும். எல்லை தாண்டி மீன் பிடித்தாக இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை இலங்கை அரசு விரைவில் தாயகம் அனுப்பும் என நம்புகிறோம்.
தமிழ் சிறுபான்மை மக்களுக்கு சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கண்ணியம் ஆகியவற்றை இலங்கை அரசு அவர்களுக்கு வழங்கிட வேண்டும். அரசியலமைப்பின் 13 வது சட்ட திருத்தம் படி அவர்களுக்கான அதிகார பகிர்வை நல்கிட வேண்டும். இதற்கான முயற்சியை இலங்கை அரசு செய்தால், கண்டிப்பாக நாட்டின் வளர்ச்சி முன்னேற்ற பாதையில் செல்லும்" என அவர் தெரிவித்திருந்தார்.
இந்தியா இலங்கையுள்ள தமிழ் சிறுபான்மையினரிடம் திடீர் அக்கறை காட்டுவது தமிழக அரசியல் சூழல் ஒரு காரணமாக பார்க்கப்படுகின்றது. இது பற்றி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த உச்சிமாநாட்டில் இந்தியா சார்பில் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதோடு 1987-ம் ஆண்டு இந்தியா-இலங்கை ஏற்படுத்திக் கொண்ட சமாதான உடன்படிக்கையை சுட்டிக்காட்டியது. மற்றும் அரசியலமைப்பின் 13 வது சட்ட திருத்தம் படி தமிழ் சிறுபான்மை மக்களுக்கு அதிகார பகிர்வு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"