World news today : பயண தடைகளுக்கு தளர்வு அறிவித்த அமெரிக்கா : அமெரிக்கா இந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்தியா, சீனா, பிரேசில், மற்றும் அனைத்து ஐரோப்பிய நாடுகளில் இருந்தும், முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட நபர்கள் பயணிக்க அனுமதி வழங்க உள்ளது. கடந்த ஆண்டு, கொரோனா தொற்று பர துவங்கிய போது போடப்பட்ட தடைகளில் தற்போது தளர்வுகளை அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை கொரோனா வைரஸ் ரெஸ்பான்ஸ் கோஆர்டினேட்டர் ஜெஃப் ஜியண்ட்ஸ் அறிவித்தார். அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் எடுத்த திடீர் மாற்றம் குறித்து இவர் கூறினார். கடந்த வாரம், கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்ற சூழலில் எந்தவிதமான கட்டுப்பாடுகளையும் நீக்குவதற்கு இது சரியான நேரம் அல்ல என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் கட்டுப்பாடுகளை நீக்குவதில் அமெரிக்கா மிகவும் பின் தங்கியுள்ளது. தற்போதைய இந்த அறிவிப்பிற்கு உலக நாடுகள் வரவேற்பு அளித்துள்ளன.
ஐ.நா. உரையில் அமெரிக்காவின் 20 வருட யுத்தம் தொடர்பான பக்கத்தை திருப்ப முயலும் ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஐ.நா. பொது சபையில் தன்னுடைய முதல் வருகையின் போது, 20 ஆண்டு யுத்தம் தொடர்பான விவகாரத்தை முழுமையாக முடிக்க திட்டமிட்டுள்ளார். COVID-19 தொற்றுநோய், காலநிலை மாற்றம் மற்றும் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளில் ஒன்றாக வேலை செய்ய உலக நாடுகளை ஒன்று திரட்ட அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
திங்கள் கிழமை அன்று உயர்மட்ட ஆலோசனை கூட்டத்திற்காக நியூயார்க் வந்த அதிபர் ஆரோக்கியமான சந்தேகத்தை எதிர்கொண்டார். அதிபராக அவர் பதவி ஏற்ற ஆரம்ப மாதங்களில், அமெரிக்கா ஃபர்ஸ்ட் என்ற டொனால்ட் ட்ரெம்பின் அணுகுமுறையால் பாதிக்கப்பட்ட நட்பு நாடுகள் ஜோ பைடன் ஆட்சியில் மிகப்பெரிய ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றன.
கனடா தேர்தல்
கனடாவின் பிரதமர் ஜெஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி நாட்டின் முதல் பிராந்தியமான அட்லாண்டிக் கனடாவில் மிதமான இடங்களை இழக்கும் போக்கில் இருந்தன. தேர்தல் முடிவுகள் பலவீனமான பிடிப்புடன் ட்ரூடோவிற்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டம் இயற்ற பிற கட்சிகளின் ஆதரவை நம்பியிருக்கும் சிறுபான்மை அரசாங்கத்திற்கு ட்ரூடோ தலைமை தாங்குகிறார். பாராளுமன்ற பெரும்பான்மையை பெறுவதற்கான நம்பிக்கையில் அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக ஒரு தேர்தலை நடத்த கோரிக்கை விடுத்தார். ஆனால் ஆரம்பகால அழைப்பு குறித்து பொதுமக்களின் அதிருப்தி வளர வளர, 49 வயதான பிரதமர் தன்னுடைய தலைமையிலான அரசு காணாமல் போவதை கண்டார். 338 தொகுதிகளை கொண்ட மக்களவையில் பெரும்பான்மை பெறுவது கடினமானது என்று தற்போது லிபரல் ஸ்ட்ரேட்டஜிஸ்ட்கள் தங்களின் கருத்தை வெளியிட்டுள்ளனர்.
கேபி பெடிட்டோ காணாமல் போன வழக்கு
வ்யோமிங் பகுதியில் கேபியின் அங்க அடையாளங்களுடன் ஒத்துப் போகும் சடலம் ஒன்று மீட்கப்பட்ட பிறகு காவல்துறையினர் மற்றும் எஃப்.பி.ஐ. ஏஜெண்ட்டுகள் கேபியை திருமணம் செய்து கொள்ள இருந்த நபரின் வீட்டில் தேடுதல் சோதனைகளில் ஈடுபட்டனர்.
தன்னுடைய மாகாணமான நியூயார்க்கில் இருந்து இந்த வருடம் ஜூன் மாதம் தன்னுடைய காதலர் ப்ரையன் லௌண்ட்ரியுடன் வேனில் மேற்கு மாகாணங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட கேபி இறுதியாக ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி அன்று சமூக வலைதளங்களில் தன்னுடைய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதன் பின்னர் அவர் என்ன ஆனார் என்பது குறித்து இதுவரை தகவல்கள் ஏதும் இல்லை.
ஹவானா சிண்ட்ரோம் அறிகுறிகளால் பாதிக்கப்பட்ட உளவுத்துறை அதிகாரி இந்தியா வருகை
இந்த மாதத்தில் சி.ஐ.ஏ. இயக்குநருடன் இந்தியா வந்த உளவுத்துறை அதிகாரி ஒருவர் ஹவானா சிண்ட்ரோம் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இது 2016 முதல் அமெரிக்க அதிகாரிகளை பாதித்த மர்மமான நிகழ்வுகளில் சாத்தியமான அதிகரிப்பைக் குறிக்கிறது என்று தற்போதைய மற்றும் முன்னாள் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.