அமெரிக்க பிரதிநிதிகள் இன்றும், நாளையும் தாலிபான்களின் மூத்த தலைவர்களை சந்தித்துப் பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சந்திப்பின் போது, ஆப்கனில் இருந்து தோஹா மற்றும் கத்தாரில் இருக்கும் அமெரிக்கர்கள், மற்ற வெளிநாட்டு குடிமக்களை வெளியேற்றுவது குறித்தும், அமெரிக்க ராணுவத்துடன் பணியாற்றி வந்த ஆப்கான்களை மீட்டு வருவது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisment
Advertisements
ஆப்கானில் குண்டுவெடிப்பு நிகழ்த்திய ஐஎஸ்ஐ பயங்கரவாதிகள் - 46 பேர் பலி
ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் ஷியா பிரிவினர் தொழுகை செய்திடும் மசுதியில், நேற்று நடந்த குண்டுவெடிப்பில் 46 பேர் உயிரிழந்துள்ளனர். டஜன் கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதல் தாலிபான்களின் பாதுகாப்பைக் கேள்விக் குறியாக்கியுள்ளது. இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். குறிப்பாக, ஷியா மக்களை குறிவைத்தும், சீனாவிலிருந்து கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக Uyghurs இனமக்களை வெளியேற்றும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பிரேசலில் 6 லட்சத்தை தாண்டிய கோவிட் மரணங்கள்
உலகளவில் 6 லட்சம் கோவிட் மரணங்களை தாண்டிய இரண்டாவது நாடு பிரேசில் உள்ளது. அந்நாட்டுப் பிரதமர் ஜெய்ர் போல்சனாரோ தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளைச் செயல்படுத்தத் தவறியதாக சுகாதாரத் துறையினர் குற்றச்சாட்டுகின்றனர். அவர் ஊரடங்கை விரும்பவில்லை, தடுப்பூசி குறித்து சந்தேகங்களை எழுப்பினார், மக்களை பொதுவெளியில் சந்திக்கும் போது மாஸ்க் அணிவதைத் தவிர்த்து வந்தார் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.
ஆரம்பத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி மந்தமாக இருந்தாலும், பின்னர் வேகமெடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 65 விழுக்காடு மக்களுக்கே முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ள நிலையில், பிரேசிலில் 70 விழுக்காடு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக முடங்கிய பேஸ்புக்
பேஸ்புக் நிறுவனம், நேற்று(வெள்ளிக்கிழமை) தொழில்நுட்ப கோளாறு காரணமாக 2 மணி நேரம் சேவை முடக்கப்பட்டதுக்கு மன்னிப்பு கோரியுள்ளது. இதில், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர், வொர்க்பிளேஸ் ஆகியவை பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக பேஸ்புக் முடங்கியது பயனாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைதிக்கான நோபல் பரிசு - 2 பத்திரிகையாளர்களுக்குப் பகிர்ந்தளிப்பு
2021ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு, பிலிபைன்ஸை சேர்ந்த பத்திரிகையாளர் மரியா ரெசா (Maria Ressa), ரஷ்யாவை சேர்ந்த பத்திரிகையாளர் டிமிட்ரி முரடோவ் (Dmitry Muratov) ஆகிய இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
அமைதிக்காகவும், ஜனநாயகத்தின் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்கும் முயற்சிகளுக்காகவும் இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படவுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil