கோவாக்சின் தடுப்பூசிக்கு இங்கிலாந்து அரசு ஒப்புதல்
Advertisment
இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசிக்கு நீண்ட தரவு ஆய்வுகளுக்குப் பிறகு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து, கோவாக்சின் தடுப்பூசிக்கு இங்கிலாந்து அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த நடைமுறை வரும் 22ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனிமேல், கோவாக்சின் தடுப்பூசியில் முழு அளவையும் செலுத்திக் கொண்டவர்கள் இங்கிலாந்துக்குப் பயணிக்கும் போது தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத குழுவுக்கு எதிராக 1 மாதம் போர் நிறுத்தம் அறிவித்த பாகிஸ்தான்
Advertisment
Advertisements
கடந்த 14 ஆண்டுகளாகப் பாதுகாப்புப் படையினர், பொதுமக்கள் மீது ஏராளமான தாக்குதல்களுக்குப் பின்னணியில் உள்ள முக்கிய பயங்கரவாத குழுவுடன் ஒரு மாத கால போர்நிறுத்தத்தைப் பாகிஸ்தான் அதிகாரிகள் அறிவித்தனர்.
பிரதமர் இம்ரான் கானின் அரசாங்கத்திற்கும் தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பிற்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்கு, ஆப்கானில் ஆட்சிபுரியும் தாலிபான்கள் உதவியதாகக் கூறப்படுகிறது. நவம்பர் 9 ஆம் தேதி தொடங்கும் போர்நிறுத்தம் டிசம்பர் 9 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். இரு தரப்பினரும் போர் நிறுத்தத்தைக் கைபிடிக்க வேண்டும். அதே சமயத்தில், இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
காலநிலையில் ஆபத்தான அவசரமின்மை…சீனா, ரஷ்யாவை சாடிய ஒபாமா
ஐ.நா காலநிலை பேச்சுவார்த்தையில் பேசிய முன்னாள் அமெரிக்க பிரதமர் பராக் ஒபாமா, அமெரிக்கப் போட்டியாளர்களான சீனா மற்றும் ரஷ்யா தங்களின் சொந்த காலநிலை அழிவு உமிழ்வைக் குறைப்பதை "ஆபத்தான அவசரமின்மை" என்று குற்றம் சாட்டினார்.
காலநிலை தொடர்பான பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கையின்மை மற்றும் செயல்பாடுகள் பின்தங்கி இருப்பதாகப் பல நாடுகள் புகார் கூறிய நிலையில், வரலாற்றுச் சிறப்புமிக்க 2015 பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்திற்கு வழி வகுத்த தலைவர் ஒபாமா.
சீனாவை எதிர்கொள்ளப்பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களைக் கையில் எடுக்கும் அமெரிக்கா
சீனா உலகின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் இரண்டு புதிய வர்த்தக வழிகளை உருவாக்கும் உள்கட்டமைப்பு முயற்சியில் களமிறங்கியுள்ளது. இதனை எதிர்கொள்ளும் வகையில், ஜனவரியில் உலகம் முழுவதும் ஐந்து முதல் 10 பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்ய அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதிபர் ஜோ பைடனின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தலீப் சிங் தலைமையிலான அமெரிக்கக் குழு, கடந்த வாரம் செனகல் மற்றும் கானாவில் குறைந்தது 10 திட்டங்களை அடையாளம் கண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜூன் மாதம் G7நாடுகளால் தொடங்கப்பட்ட பில்ட் பேக் பெட்டர் வேர்ல்ட் (B3W) முன்முயற்சியின் கீழ் நிதியளிக்கப்படும் திட்டங்களுக்காக, அரசு மற்றும் தனியார் துறை தலைவர்களை அதிகாரிகள் சந்தித்து வருகின்றனர். டிசம்பரில் G7 கூட்டத்தின் போது திட்டங்கள் இறுதி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆறு பாலஸ்தீனிய மனித உரிமை ஆர்வலர்களின் செல்போன்களில் ஸ்பைவேர்
இஸ்ரேலிய ஹேக்கர்-பார்-ஹயர் நிறுவனமான NSO குழுமத்தின் ஸ்பைவேர் ஆறு பாலஸ்தீனிய மனித உரிமை ஆர்வலர்களின் செல்போன்களில் கண்டறியப்பட்டதாகப் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது பாலஸ்தீனிய ஆர்வலர்கள் ராணுவ தரமான பெகாசஸ் ஸ்பைவேரால் குறிவைக்கப்பட்ட முதல் அறியப்பட்ட நிகழ்வைக் குறிக்கிறது.
ஆர்வலர்களின் தொலைபேசிகளில் NSO ஸ்பைவேரை வைத்தது யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை என அதனை முதலில் கண்டறிந்த ஆராய்ச்சியாளர் முகமது அல்-மஸ்கதி கூறினார். இந்த ஹேக்கிங் ஆனது ஜூலை 2020இல் அவர்களது செல்போனில் ஆரம்பித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil