1. யாராலும் வெல்ல முடியாத ஆர்மியை உருவாக்கும் கிம்
Advertisment
வடகொரியா அதிபர் கிம் ஜாங், ஆயுத அமைப்புகள் கண்காட்சியைப் பார்வையிட்டார். அப்போது, யாராலும் வெல்ல முடியாத ஆர்மியை உருவாக்குவதாகக் கூறினார்.
அமெரிக்கா தேவையில்லாமல் பதற்றத்தை ஏற்படுத்தி வருவதாகவும், அவர்களுக்கு வடகொரியாவுக்கு விரோத நோக்கம் கிடையாது என்பதை புரிய வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. தென் கொரியாவுக்கு எதிராக தங்களது ஆர்மி செயல்பாடு இருக்காது. கொரியா மக்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளக் கூடாது என கூறினார்.
Advertisment
Advertisements
2. ஊரடங்கை அமல்படுத்துவதில் தாமதித்த இங்கிலாந்து கொரோனா தொற்று பரவ தொடங்கிய ஆரம்ப நாள்களில், ஊரடங்கை அமல்படுத்துவதில் இங்கிலாந்து அரசு தாமத்தித்தாகவும், இதன் காரணமாகவே வைரஸ் அதிகளவில் பரவி ஆயிரக்கணக்கான உயிர்கள் பறிக்கப்பட்டதாக ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. ஆராய்ச்சியாளர்களின் பரிந்துரையை அமைச்சர்கள் கேட்க தவறியதாகவும் குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது.
3. பெண்களுக்குக் கல்வி கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம் - ஆப்கான் அமைச்சர் ஆப்கானிஸ்தானில் அனைத்து குழந்தைகளையும் மீண்டும் பள்ளிக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற சர்வதேச கோரிக்கைகள் இருந்தபோதிலும், ஆப்கான் வெளியுறவுத் துறை அமைச்சர் பெண்கள் கல்வி குறித்து உறுதியான உறுதிமொழிகளை வழங்கவில்லை. டோகா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்த விழாவில் பேசிய அமைச்சர் அமீர்கான் முத்தாகி, சர்வதேச சமூகம் எங்களுடன் ஒத்துழைக்கத் தொடங்க வேண்டும். இதன் மூலம் பாதுகாப்பின்மையை அகற்றிட முடியும் என்றார். ஆறாம் வகுப்புக்கு மேல் உள்ள பள்ளிகள் மாணவர்களுக்காக மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. சர்வதேச சமூகத்தின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான பெண்களை உயர்நிலைப் பள்ளிக்கு அனுப்புவதற்கு, தாலிபான்கள் இன்னும் அனுமதி வழங்கவில்லை.
4. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் முக்கிய தலைவரைக் கைது செய்த ஈரான்
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவரான சாமி ஜாசிமை கைது செய்துள்ளதாக ஈரான் பிரதமர் முஸ்தபா அல்-காதிமி தகவல் தெரிவித்துள்ளார். இவர் மறைந்த அபு பக்கர் அல்-பாக்தாதியின் கீழ் ஐஎஸ் அமைப்பினர் துணைத் தலைவராக இருந்தவர்.
மேலும், அமைப்பின் நிதி பரிமாற்றம் நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டு வந்தவர். 2006 இல் ஈராக்கில் அமெரிக்க நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஜோர்டான் பயங்கரவாதியான அபு முசாப் அல்-ஜர்காவியுடன் ஜாசிம் இணைந்து அல்-காய்தாவுக்காக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
5. கொரோனா தடுப்பூசி கட்டாயம் அறிவிப்பை ரத்து செய்த டெக்சாஸ் ஆளுநர் டெக்சாஸ் கவர்னர் கிரெக் அபோட், தனியார் ஊழியர்கள் உட்பட மாகாணத்தில் உள்ள எந்தவொரு நிறுவனமும் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்ற உத்தரவைப் பின்பற்றத் தேவையில்லை என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பானது, அதிபர் பைடனுக்கு எதிரான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
ஏனென்றால், கடந்த மாதம் பைடன் அரசாங்கம் நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாவிட்டால், வேலையைவிட்டு நீக்கப்படுவீர்கள் என எச்சரித்திருந்தது. தடுப்பூசி போடுவதற்கு சம்மதிக்காத, பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உடனடியாக வேலையிலிருந்து நீக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு, டெக்சாஸ் ஆளுநர் கடும் அதிருப்தியைத் தெரிவித்திருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil